சென்னை:

நாடாளுமன்ற தேர்தலில், அதிமுக கூட்டணிக்கு தோல்வி நிச்சயம் என்றும், அதிமுக பாஜக கூட்டணிக்கு எதிராக திமுக வியூகம் வகுத்திருப்பதாகவும்  மார்க்சிய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்  தெரிவித்து உள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் கூட்டணி பேச்சு வார்த்தைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இந்த தேர்தலில் பாஜகவை வீழ்த்தி அனைத்து எதிர்க்கட்சிகளும் கங்கணம் கட்டிக்கொண்டு தேர்தல் களத்தில் குதித்துள்ளன.

இந்த நிலையில், பாஜகவுக்கு எதிராக கம்யூனிஸ்டு கட்சியும் போராடும் என்று கூறிய கம்யூனிஸ்டு பாலகிருஷ்ணன்,  1977ம் ஆண்டு பிறகு, தற்போதுதான் நாட்டின் இறையாண்மை, சுதந்திரம், மதச் சார்பின்மை, பன்முகத்தன்மை, அரசியலமைப்பு சாசனத்தையும் பாதுகாப்பதற்கான முக்கியமான தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த தேர்தல் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கக்கூடிய தேர்தல் என்பதால், விருப்பு, வெறுப்பு இருந்தாலும் மோடி தலைமையிலான மத்திய அரசை வீழ்த்துவதே அரசியல் கட்சிகளின் முக்கிய  மையப்புள்ளி. அதுபோல தமிழகத்தில்,பாஜகவுடன் சேர்ந்துள்ள அதிமுகவும் வீழ்த்தப்பட வேண்டியது அவசியம்.

திமுக உடனான தொகுதி பங்கீட்டில் வழங்கம்போல பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இன்னும் ஓரிருநாளில் உடன்பாடு ஏற்பட்டு விடும் .

பாமக அதிமுக அணிக்கு சென்றுவிட்டதால் திமுக கூட்டணிக்கு பாதிப்பு கிடையாது. தேர்தலில் நேரடியாக வீழ்த்தவும், மறைமுகமாக வீழ்த்தவும். அதிமுகவின் பலத்தைக் குறைப்பதற்காக திமுக வியூகம் அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில்  திமுக கூட்டணிக்குத்தான் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. ஏனென்றால், தமிழ்நாட் டில் எந்த பிரதமருக்கும் இல்லாத அளவுக்கு மோடிக்கு கடும் எதிர்ப்பும், அதிருப்தியும் உள்ளது. அதிமுக பிளவுபட்டிருப்பதாலும், பாமக ஏற்கெனவே கரைந்து வருவ தாலும் இந்த மூன்று கட்சிகளின் வாக்கு வங்கி சரிந்துள்ளது.

பழைய அதிமுகவாக இருந்திருந் தால் உள்ளாட்சி தேர்தலை நடத்தி இருப்பார்கள். தற்போது அந்த அள வுக்கு பலம் இல்லை என்பதை தற்போதைய அதிமுக உணர்ந் திருக்கிறது. அதனால்தான் இல்லா ததையும், பொல்லாததையும் சொல்லி இடைத்தேர்தலையும் நிறுத்தி வைக்கிறார்கள்.

அதிமுக கூட்டணியில் சமூக நலன், மக்கள் நலன் இல்லை என்று மக்கள் கருதுவதால் அதிமுக கூட்டணிக்கு தோல்வி நிச்சயம். புதிய வாக்காளர்கள் இவர்களை ஆதரிப்பதற்கான எவ்வித உத்தரவாதமும் இல்லை. எனவே, திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.