சமூக வலைதளங்களில் அவதூறு: காவல் ஆணையாளர் அலுவலகத்தில் ஜெ.தீபா புகார் மனு!

Must read

சென்னை,

மூக வலைதளங்களில்  தன்மீது அவதூறுகள் பரபரப்பப்படுவதாகவும், அதன்மீது  நடவடிக்கை எடுக்கக்கோரி, ஜெ.வின் அண்ணன் மகளான ஜெ.தீபா சென்னை காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்துள்ளார்.

இன்று பகல் சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையாளர் அலுவலகம் வந்த தீபா, ஆணையாளரை சந்திக்க வேண்டும் என்றும், புகார் மனு கொடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

அதையடுத்து, அவரிடம் இருந்து புகார் மனுவை துணை ஆணையாளர் பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

அந்த புகார் மனுவில், பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் போன்ற  சமூக வலைதளங்களில் தன்னைப் பற்றி அவதூறு கருத்துகள் பரபரப்பப்பட்டு வருகிறது. இதன்காரணமாக எனது நற்பயருக்கு களங்கம் ஏற்படுகிறது. எனவே, அவதூறு பரப்புவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.

மேலும், தன்னை சசிகலா குடும்பத்தினர், டிடிவி தினகரன் தரப்பினர் தொடர்ந்து மிரட்டி வருவதாகவும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

காவல் ஆணையாளர் அலுவலகத்துக்கு ஜெ.தீபா, தனது வழக்கறிஞருடன் வந்து புகார் மனுவை அளித்தார்.

More articles

Latest article