சென்னை:
வன்கொடுமை சட்டத்தில் கைது செய்யப்பட்டு, இடைக்கால ஜாமினில் உள்ள திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு தமிழகஅரசின் தலைமை வழக்கறிஞர், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருவது தொடர்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

திமுக சட்டத்துறை மற்றும் அமைப்புச்செயலாளராக இருந்து வருபவர் ஆர்.எஸ்.பாரதி, இவர் கடந்த பிப்ரவரி மாதம் நடைபேற்ற நிகழ்ச்சியில் பேசும்போது, நீதிபதிகள் நியமனம் தொடர்பாகத் தெரிவித்த கருத்துகள், தாழ்த்தப்பட்ட மக்களை அவமதிக்கும் வகையில் இருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இதுதொடர்பான புகார், ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டு, தற்போது ஜாமினில் உள்ளது.
இந்த நிலையில், வழக்கறிஞர் அந்தோணி என்பவர் ஆர்.எஸ். பாரதி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி கோரியிருந்தார்.
இதையடுத்து, அரசு தலைமை வழக்கறிஞர் விஜய்நாராயண் ஆர்.எஸ்.பாரதிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி கோரிய மனு மீது திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி 2 வாரங்களில் பதிலளிக்கும்படியும், நீதிபதிகளை அவமதித்து பேசியதால் ஏன் அவமதிப்பு வழக்கை சந்திக்கக்கூடாது? என்றும் அரசு கேள்வி எழுப்பியுள்ளார்.

Patrikai.com official YouTube Channel