டோக்கியோ ஒலிம்பிக் வில்வித்தை: காலிறுதிக்கு முன்னேறினார் தீபிகா குமாரி

Must read

டோக்கியோ:
லிம்பிக் வில்வித்தை தனிநபர் போட்டி பங்கேற்ற  இந்திய வீராங்கனை தீபிகா குமாரி, காலிறுதிக்கு முந்தைய சுற்றியில் ரஷ்ய வீராங்கனையை ஹெசினா புரோவாவை 6-5 என்ற புள்ளி கணக்கில்  வீழ்த்தி வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

32வது ஒலிம்பிக் போட்டி ஜப்பானின் டோக்கியோ நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின்  வில்வித்தை ‘ரீகர்வ்’ பிரிவு பெண்கள் ஒற்றையர் பிரிவல் இந்தியாவின் தீபிகா குமாரி பங்கேற்றார். நேற்று நடந்த   காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் தீபிகா குமாரி, ரஷ்ய வீராங்கனையான ஹெசினா புரோவாவுடன் மோதினார். இந்த போட்டியின்  முதல், 3-ஆவது சுற்றை தீபிகாவும், 2-ஆவது சுற்றை ஹெசினாவும் வென்றனர். நான்காவது சுற்றில் இருவரும் 26 புள்ளிகள் பெற்று சமன் நிலையில் இருந்த நிலையில், 5வது சுற்றில் ஹெசினா வெற்றி பெற்றார்.  இதனையடுத்து நடந்த டைபிரேக்கர் ஆட்டத்தில் ஹெசினாவை தீபிகா, 6-5 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தினார். இந்த வெற்றி மூலம்  இந்தியாவின் தீபிகா குமாரி காலிறுதிக்கு முன்னேறினார்.  இதனையடுத்து காலிறுதிப் போட்டி இன்று காலை 11.30 மணிக்கு நடைபெறுகிறது.

More articles

Latest article