சென்னை:
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான 2- வது கட்ட பிரசாரத்தை திமுக வருகிற 20 ஆம் தேதி, துவங்க உள்ளதாக அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

திமுக தொண்டர்களுக்கு அவர் எழுதி உள்ள கடிதத்தில், மக்களுக்காக தொடர்ந்து பாடுபடும் இயக்கத்தை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்ல உழைக்குமாறு, கேட்டுக்கொண்டுள்ளார்.
வெற்றி இலக்கை நோக்கி ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைக்க வேண்டுமென அறிவுறுத்தி உள்ள மு.க. ஸ்டாலின், கவனம் சிதறாமல் களப் பணியாற்றுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்
Patrikai.com official YouTube Channel