சென்னை:
ட்டப்பேரவையில் இன்று ஹிந்து சமய அறநிலையத் துறை மீதான மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற உள்ளது.

சட்டசபையில், பொது பட்ஜெட் மற்றும் வேளாண் துறைக்கான தனி பட்ஜெட் மார்ச்சில் தாக்கல் செய்யப்பட்டது. துறை வாரியான மானியக் கோரிக்கை மீதான விவாதம், ஏப்ரல் 6 முதல் நடந்து வருகிறது.

நான்கு நாட்கள் தொடர் விடுமுறைக்கு பின், இன்று மீண்டும் சட்டசபை கூடுகிறது.

இன்று காலை கேள்வி நேரத்திற்குப் பின், ஹிந்து சமய அறநிலையத் துறை, தகவல் தொழில்நுட்ப துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடக்க உள்ளது.அமைச்சர்கள் சேகர்பாபு, மனோ தங்கராஜ் ஆகியோர் பதில் அளித்து, புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிட உள்ளனர்.