டெல்லி:

ந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 17,656 ஆக அதிகரித்துள்ளது.  பலி எண்ணிக்கையும் 559 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் பல மாநிலங்களில் ஊரடங்கு தளர்வு ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில்,  டெல்லி, மகாராஷ்டிரா, குஜராத், மத்திய பிரதேசம், தமிழகம் போன்ற மாநிலங்களில் கொரோனா பாதிப்பு உயர்வு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதுகுறித்து  மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 17,656 ஆக உயர்ந்துள்ளது.

குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2842 ஆக அதிகரித்து உள்ளது.

பலி எண்ணிக்கை   559 ஆகவும், அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று அதிகம் உள்ள மாநிலங்களில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது.  அங்கு இதுவரை 4203 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தலைநகர் டெல்லியில் 2003 பேரும்,  குஜராத்தில்  1851 பேரும்,  ராஜஸ்தான் 1478 பேரும், தமிழக்ததில் 1520 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

மத்திய பிரதேசம் – 1485,  உத்தரபிரதேசம்  – 1176,  தெலுங்கானா-873,  ஆந்திரா – 722, கேரளா-402, கர்நாடகா- 395, காஷ்மீர் -350, மேற்கு வங்கம் – 339, அரியானா – 233, பஞ்சாப் – 219, பீஹார் -96, ஒடிசா- 68, உத்தரகாண்ட் –44, ஜார்க்கண்ட் – 42,  இமாச்சல பிரதேசம் – 39, சண்டிகர் -36, லடாக்- 18, அந்தமான்-15, மேகாலயா – 11, புதுச்சேரி – 07, கோவா – 07, திரிபுரா-02, மணிப்பூர் – 02, அருணாச்சல பிரதேசம் – 01, மிசோரம் – 01

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது