சென்னை:  “அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும்” – சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். கோட்டை கொத்தளத்தில் 2வது முறையாக தேசிய  கொடியை ஏற்றி வைத்து மரியாதை செய்த முதலமைச்சர், சுதந்திர தின பரிசாக அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படி 31%ல் இருந்து 34% ஆக உயர்துவதாக  அறிவித்து உள்ளார். அத்துடன் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கான ஓய்வூதியமும் 20ஆயிரமாக உயர்த்தப்படுவதாக அறிவித்தார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று 2வது முறையாக கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றி மரியாதை செய்தார். காலை 9 மணிக்கு கோட்டை கொத்தளத் தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். இந்த  சுதந்திர தின விழா நிகழ்ச்சியில், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசு உயர் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
அதைத்தொடர்ந்து காவல்துறையினர் உள்பட பல்வேற துறையினரின்  அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய முதல்வர், அரசு ஊழியர்களுக்கு சுதந்திரன தினபரிசாக அகவிலைப்படியை 3 சதவிகிதம் உயர்த்துவதாக அறிவித்தார். அரசு அலுவலர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு 1-7-2022 முதல் அகவிலைப்படி வழங்கப்படும். இதன் மூலம் 16 லட்சம் பேர் பயன்பெறுவர். இதனால் ஆண்டுக்கு அரசுக்கு ரூ.1,947 கோடியே 60 லட்சம் கூடுதலாகச் செலவாகும் என்று முதல்வர் தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து,  சுதந்திர போராட்ட வீரர்களுக்கான மாதாந்திர ஓய்வூதியம் ரூ.18 ஆயிரத்திலிருந்து ரூ.20 ஆயிரமாக உயர்தப்படுவதாகவும், அறிவித்தார். மேலும் பல்வேற அறிவிப்புகளை வெளியிட்டார்.
ஏற்கனவே அரசு ஊழியர்கள் அகவிலைப்படி 31 சதவிகிதமாக உள்ள நிலையில், தற்போது மேலும் 3 சதவிகிம் உயர்த்தி 34 சதவிகிதமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்ந்து,   இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணுவுக்கு `தகைசால் தமிழர்விருது வழங்கினார். அதேபோல, பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் ஆய்வுநிறுவனத்தின் இயக்குநர் .இஞ்ஞாசிமுத்துவுக்கு அப்துல் கலாம் விருது, நாகை மாவட்டம் கீழ்வேளூரைச் சேர்ந்த எழிலரசிக்கு கல்பனா சாவ்லாவிருது, முதல்வரின் நல்லாளுமை விருதுகள், மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பான சேவை புரிந்த மாவட்ட ஆட்சியர், மருத்துவர், நிறுவனங்களுக்கும் விருதுகளை வழங்கவுள்ளார். மேலும், முதல்வரின் இளைஞர் விருதுகள், கரோனா தடுப்பு சிறப்பு பதக்கம், சிறந்த உள்ளாட்சி அமைப்புக்கான விருது, வீர தீர செயலுக்கான விருது உள்ளிட்டவற்றையும் முதல்வர் வழங்குகிறார்.