ஷன்சி,
சீனாவில் ஏற்பட்ட வெடி விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 94 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகிறது.
சீனாவின் ஷான்ஷி மாகாணத்தில் உள்ள கட்டுமான பொருட்கள் உற்பத்தி செய்யும் இல்லம் ஒன்றில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் அருகாமையில் உள்ள கட்டிடங்களும் சேதம் அடைந்தன. இந்த கோர விபத்தில் 9 பேர் பலியாகினர். 94 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த வெடி விபத்துக்கு காரணம் என்னவென்று தெரியவில்லை. விபத்தை தொடர்ந்து கட்டிட இடிபாடுகளுக்கு உள்ளும் தீ விபத்துக்குள்ளும் சிக்கியவர்களை தீ அணைப்பு வீரர்கள் மீட்டனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.