வரலாற்றில் இன்று 25.10.2016

Must read

வரலாற்றில் இன்று 25.10.2016
அக்டோபர் 25 (October 25) கிரிகோரியன் ஆண்டின் 298 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 299 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 67 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1147 – முதலாம் அஃபொன்சோ தலைமையில் போர்த்துகீசர் லிஸ்பன் நகரைப் பிடித்தனர்.
1760 – மூன்றாம் ஜோர்ஜ் பெரிய பிரித்தானியாவின் மன்னனானான்.
1900 – ஐக்கிய இராச்சியம் தென்னாபிரிக்காவின் டிரான்ஸ்வால் மாநிலத்தை இணைத்துக்கொண்டது.
1917 – ரஷ்யாவில் அக்டோபர் புரட்சி (பழைய ஜூலியன் நாட்காட்டியின் படி), இடம்பெற்றது. 
1924 – இந்தியாவில் சுபாஷ் சந்திர போஸ் பிரிட்டனால் சிறைப்பிடிக்கப்பட்டார்.
1936 – ஹிட்லர் மற்றும் முசோலினி இணைந்து ரோம்-பேர்லின் அச்சு என்ற கூட்டமைப்பை ஏற்படுத்தினர்.
1944 – இரண்டாம் உலகப் போர்: பிலிப்பீன்சில் ஐக்கிய அமெரிக்காவுக்கும் ஜப்பானுக்கும் இடையில் வரலாற்றில் பெரும் கடற்போர் இடம்பெற்றது.
1945 – இரண்டாம் உலகப் போர்: ஜப்பான் கூட்டு நாடுகளிடம் சரணடைந்ததைத் தொடர்ந்து சீனக் குடியரசு தாய்வானை இணைத்துக் கொண்டது.
1971 – ஐநாவிலிருந்து சீனக் குடியரசு வெளியேற்றப்பட்டு மக்கள் சீன குடியரசு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
1983 – ஐக்கிய அமெரிக்காவும் அதன் கரிபியன் கூட்டு நாடுகளும் கிரெனாடாவை முற்றுகையிட்டு அதனைக் கைப்பற்றின.
1991 – யூகொஸ்லாவிய இராணுவம் சிலவேனியாவில் இருந்து முற்றாக வெளியேறியது.
2001 – விண்டோஸ் எக்ஸ்பி வெளியிடப்பட்டது.
2001 – இந்தியாவில் தடா சட்டத்துக்கு பதிலாக POTO என்ற புதிய பயங்கரவாத தடுப்பு சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. 
2007 – சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முதலாவது இரட்டை அடுக்கு விமானம் ஏர்பஸ் ஏ380 தனது முதலாவது சேவையை சிட்னிக்கு ஆரம்பிக்கிறது.
பிறப்புக்கள்
1811 – எவரிஸ்ட் கால்வா, பிரெஞ்சு கணிதவியலர் (இ. 1832)
1881 – பாப்லோ பிக்காசோ, ஸ்பானிய ஓவியர், சிற்பி (இ. 1973)
இறப்புகள்
1400 – ஜெஃப்றி சோசர், ஆங்கில இலக்கிய மேதை. (பி 1340)
2005 – நிர்மல் வர்மா, ஹிந்தி எழுத்தாளர் (பி. 1929)
1980 – ஸாகிர் லுதியானவி, ஹிந்தித் திரைப்படப் பாடலாசிரியர் (பி. 1921)
சிறப்பு நாள்
கசக்ஸ்தான் – குடியரசு நாள் (1990)

Support patrikai.com

பத்திரிக்கை டாட் காம் இணையதள செய்திகளை அதிகளவு விரும்பி படிப்பதற்கு நன்றி. சிறந்த முறையில் செய்திகளை தொடர்ந்து வழங்க பத்திரிக்கை டாட் காம் குழுவிற்கு உங்கள் நிதிப் பங்களிப்பை வழங்கி ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். தொடர்ந்து பல்வேறு கோணங்களில் செய்திகளை வழங்கவும், பதிவு செய்யப்படாத அரிய செய்திகளை ஆவணப்படுத்தவும் உங்கள் நன்கொடை உதவிகரமாக இருக்கும் என்பதில் எந்த ஒரு ஐயப்பாடும் இல்லை.

More articles

Latest article