மும்பை:
.பி.எல். 2022 தொடரில் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 21 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.

இதையடுத்து முதலில் களமிறங்கி விளையாடிய டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் எடுத்தது.

208 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய ஹைதராபாத் அணி 186 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது. இதன் மூலம் டெல்லி அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்க உள்ள போட்டியில் குஜராத் – மும்பை அணிகள் மோத உள்ளன.