ஜெய்ப்பூர்

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பெட்ரோல் முகவர்கள் 2 நாட்கள் வேலை நிறுத்த போராட்டம் செய்கின்றனர்.

நாளுக்கு நாள் ராஜஸ்தான் மாநிலத்தில் எரிபொருள் விலை அதிகரித்து வருகிறது. இதைக் கண்டித்து அந்த மாநிலத்தைச் சேர்ந்த பெட்ரோல் முகவர்கள் சங்கத்தினர் 2 நாட்கள் வேலைநிறுத்தப் போராட்டத் தைத் தொடங்கியுள்ளனர்.

இந்த வேலைநிறுத்தம் காரணமாக, மாநிலத்தில் உள்ள பெட்ரோல் நிலையங்கள் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் முகவர்கள் சங்கத்தினர் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியைக் குறைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

இதனால் ராஜஸ்தானில் இன்று காலை 6 மணிக்குத் தொடங்கிய பெட்ரோல் முகவர்கள் சங்கத்தினரின் வேலைநிறுத்தப் போராட்டம், அடுத்த 48 மணி நேரத்திற்குத் தொடர உள்ளது.