திருப்பதி

னவரி மாதம் திருப்பதி கோவிலில் தரிசனம் செய்ய ரூ.300 டிக்கட்டுகள் நாளை மறுநாள் (24ஆம் தேதி) காலை வெளியிடப்படுகிறது.

திருப்பதி கோவிலில் இலவச தரிசன டிக்கட்டுகள் 31 ஆம் தேதி வரை நேரடியாக வரும் பக்தர்களுக்குத் தினசரி 5000 டிக்கட்டுகள் வீதம் வழங்கப்பட உள்ளன.  ஆகவே ஜனவரி மாதம் முதல் பக்தர்கள் தரிசன டிக்கட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும் எனத் திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

எனவே ஜனவரி மாதம் திருப்பதி கோவிலில் தரிசனம் செய்வதற்கான ரூ.300 சிறப்புத் தரிசன டிக்கட்டுகள் நாளை மறுநாள் அதாவது 24 ஆம் தேதி காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.  அத்துடன் அடுத்த நாளான 25 ஆம்தேதி காலை 9 மணிக்கு இலவச தரிசன டிக்கட்டுகள் வெளியாகிறது.

தினசரி ரூ.300 டிக்கட்டுகள் 20 ஆயிரம் வீதம் ஜனவரி மாதத்துக்கு 6.20 லட்சம் டிக்கட்டுகள் ஆன்லைன் மூலம் 24 ஆம் தேதி வெளியிடப்படுகிறது.  இதைப் போல் இலவச தரிசன டிக்கட் நாள் ஒன்றுக்கு 5 ஆயிரம் வீதம் ஜனவரி மாதத்துக்கு 1.55 லட்சம் டிக்கட்டுகள் ஆன்லைன் மூலம் 25 ஆம் தேதி வெளியிடப்படுகிறது.