பஞ்சாப்: 
ஞ்சாப் மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் இல்லாவிடில் அரசு ஊழியர்களுக்குச் சம்பளம் இல்லை என்று பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவி வந்த சூழலில், அதனை முற்றிலுமாக ஒழிக்கும் நோக்கில் மாநில அரசுகள் தடுப்பூசி போடும் பணியை முடுக்கி விட்டுள்ளன. மக்களும் ஆர்வமாகத் தடுப்பூசி போட்டுக்கொள்கின்றனர். இருப்பினும் ஒரு சில தடுப்பூசி போடாமல் இருப்பதனால் காரணமாகவும், தடுப்பூசி போடும் எண்ணிக்கையை உயர்த்தும் விதமாகவும் அந்தந்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில் தடுப்பூசி சான்றிதழ் இல்லாவிடில் அரசு ஊழியர்களுக்குச் சம்பளம் கிடையாது என்று பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது.