தர்ணா எதிரொலி: அதிமுக எம்பிக்களை சந்திக்க மோடி முடிவு!

Must read

டில்லி,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்த மத்தியஅரசின் முடிவு குறித்து மோடியை சந்திக்க சென்ற அதிமுக எம்.பிக்களை சந்திக்க மறுத்துள்ளார் பிரதமர் மோடி.
இதன் காரணமாக பிரதமர் அலுவலகம் எதிரே  அதிமுக எம்பிக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையடுத்து சந்திக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.
பிரதமர் மோடியிடம்  காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி  மனு அளிக்கவுள்ளனர்
cauvery1
பிரதமர் அலுவலகத்துக்கு செல்லும் வாகனங்களை அதிமுக எம்பிக்கள் தடுத்து நிறுத்தினர்.
காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காததை கண்டித்து மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரை தலைமையில் அதிமுக எம்பிக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதையடுத்து  பிரதமர் மோடி அதிமுக எம்பிக்களை சந்திக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

More articles

Latest article