பெங்களூரு:
காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. கர்நாடக அணைகளுக்கு கூடுதலாக 5 டி.எம்.சி தண்ணீர் வந்துள்ளதால் நீரை திறந்து விட முடிவு செய்யப்பட்டது.
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை மதிக்காத கர்நாடகம் இன்று மீண்டும் சட்டசபையை கூட்டியது இதற்கான தீர்மானம் நிறைவேற்றியது. உபரியாக இருக்கும் 5 டிஎம்சி தண்ணீரை வெளியேற்ற முடிவு செய்து, காவிரியில் திறந்து விட முடிவு செய்துள்ளது.
cauvery_eps
இதுகுறித்த விவாதத்தின்போது பேசிய கர்நாடக உள்துறை அமைச்சர், பரமேஸ்வரா, காவிரி படுகையில் உள்ள நீர்த்தேக்கங்களில் கடந்த 10 நாட்களில் ஆறு, ஏழு டிஎம்சி தண்ணீர் கூடுதலாக வந்துள்ளது என்று கூறியது குறிப்பிடத்தக்கது.