தனுஷ்- வெற்றிமாறன் கூட்டணியில் வெளியான அசுரன் திரைப்படம் நேற்று தமிழகம் முழுவதும் வெளியிடப்பட்ட நிலையில், அடுத்த சில மணி நேரத்திலேயே தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் திருட்டுத்தனமாக வெளியிட்டது. இது படத்தயாரிப்பாளரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கலைப்புலி தாணு தயாரிப்பில் தனுஷ்- இயக்குனர் வெற்றிமாறன் கூட்டணியில் உருவான படம் அசுரன். இந்த படம் நேற்று (அக்டோபர் 4) நாடு முழுவதும் வெளியானது.
இந்த படத்தில், தனுசுக்கு ஜோடியாக , மஞ்சு வாரியர் மற்றும் பிரகாஷ் ராஜ் உள்பட திரையுலக பட்டாளங்கள் நடித்துள்ளன.
இந்த படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், படக்குழு அதிர்ச்சி அடையும் வகையில், படம் வெளியான சில மணி நேரத்தில், தமிழ் ராக்கர்ஸ் தளம், இணையதளத்தல் வெளியிட்டு உள்ளது.
தமிழ் ராக்கர்ஸ்சுக்கு எதிராக திரைப்படத்துறை சார்பாக சட்டபூர்வ நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், அவ்வப்போது தனது இணையதள முகவரிகளை மாற்றிக்கொண்டு தமிழ் ராக்கர்ஸ் படங்களை வெளியிட்டு வருவதை தொடர்ந்து வருகிறது.
[youtube-feed feed=1]