பிக்பாஸ் 3 இறுதி போட்டி: இரு போட்டியாளர்களுக்கு இடையே கடும் போட்டி

Must read

பிக்பாஸ் தமிழ் 3 நிகழ்ச்சியின் வெற்றியாளருக்கான போட்டியில் முகென் – லாஸ்லியா இடையே கடுமையான போட்டி நிலவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

100 நாட்களை கடந்து, விஜய் தொலைக்காட்சியால் ஒளிபரப்பப்பட்டு வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசன் சில மாதங்களுக்கு முன்பு 16 போட்டியாளர்களை கொண்டு தொடங்கியது. சேரன், லாஸ்லியா, கவின், சாண்டி, ஷெரின், மதுமிதா, சரவணன், பாத்திமா பாபு, ரேஷ்மா, மீரா மிதுன், வனிதா, தர்ஷன் உட்பட பலரோடு தொடங்கிய இந்நிகழ்ச்சியில் வாரம் ஒரு எலிமினேஷன் நடைபெற்று வந்தது. போட்டியின் இடையிலேயே பெண்கள் குறித்த விமர்சனத்திற்காக நடிகர் சரவணனும், தற்கொலைக்கு முயன்றதற்காக நடிகை மதுமிதாவும் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டனர். கடைசியாக இந்நிகழ்ச்சியில் இருந்து தர்ஷன் வெளியேறினார். இறுதி போட்டியில் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட தர்ஷன் வெளியேற்றப்பட்டது பலரையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனால் சமூக வலைதளத்தில் விஜய் டிவிக்கு எதிரான கோஷங்களும் டிரென்ட் செய்யப்பட்டது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி போட்டிக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், முகென், லாஸ்லியா, சாண்டி, ஷெரின் ஆகிய 4 பேர் பிக்பாஸ் பட்டத்தை வெல்ல போட்டிப்போட்டு வருகின்றனர். கடந்த 2 நாட்களாக பிக்பாஸ் இல்லத்தில் இருந்து வெளியேறிய போட்டியாளர்களில் சரவணன் மற்றும் மதுமிதாவை தவிற்த்து மற்ற அனைவரும், இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள 4 போட்டியாளர்களை சந்தித்து, தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டதோடு, அறிவுரைகளையும் வழங்கினர்.

இத்தகைய சூழலில் இறுதிப் போட்டியில் பிக்பாஸ் வெற்றியாளர் பட்டத்தை கைப்பற்ற முகென் – லாஸ்லியா இடையே கடும் போட்டி நிலவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முகென் மற்றும் ஷெரினுக்கு ஆதரவாக தர்ஷன் ஆதரவாளர்களும், சாக்ஷி அகர்வால் ஆதரவாளர்களும் தங்களது வாக்குகளை ஆன்லைனில் அளித்து வரும் அதேநேரம், லாஸ்லியாவுக்கு ஆதரவாக அவரது சமூகவலைதள ஆர்மிக்களும், கவின் ரசிகர்களும் வாக்குகளை செலுத்தி வருகின்றனர். சாண்டிக்கு ஆதரவு கேட்டு ஏற்கனவே நடிகை காஜல் பசுபதி தரப்பில் சமூக வலைதளத்தில் பல்வேறு பதிவுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏனெனினும், முகென்- லாஸ்லியா இடையே தான் கடுமையான போட்டி இருப்பதாக கூறப்படுகிறது.

பிக்பாஸ நிகழ்ச்சியின் 3வது சீசனுக்கான இறுதி போட்டி இன்னும் 2 நாட்களில் நடைபெற உள்ள நிலையில், யார் வெற்றி பெறுவார்கள் என்பதை காண பலரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More articles

1 COMMENT

Latest article