சென்னை:

பிரதமர் மோடி சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு நடைபெற உள்ள நிலையில், பாதுகாப்பு வளையத் திற்குள் கொண்டுவரப்பட்டுள்ள  மாமல்லபுரத்தில் சுற்றுலாப் பயணிகளுக்குத் 10ந்தேதிக்குள் மேல் தடை விதிக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

தற்போதே அங்கு காவல்துறையினரின் கடும் கெடுபிடிகள் நடைபெற்று வரும் நிலையில், 10ந்தேதிக்கு மேல் சுற்றுலாப் பயணிகள் வருகைக்கு தடை விதிக்கப்படலாம் என்று கூறப்படு கிறது.

காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் வரும்  12 மற்றும் 13 தேதிகளில் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளது. இந்த சந்திப்பின்போது, இரு நாடுகளுக்கு இடையே பல முக்கிய ஒப்பந்தந்தங்கள் கையெழுத்தாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

வரலாற்று முக்கியம் வாய்ந்த இந்த சந்திப்பை தொடர்ந்து இருவரும்,  அங்குள்ள அர்ச்சுனன் தபசு, அஞ்சு ரதம், பகுதிகளில் உள்ள சிற்பங்கள் மற்றும் கடற்கரை கோவில் கோபுரங்களை பார்வையிட உள்ளனர்.

இதன் காரணமாக அந்த பகுதிகள் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.மேலும் மாமல்லபுரம் பகுதி முழுவதும் சிசிடிவி கேமரா அமைத்து தீவிர கண்காணிப்பு பணியில் மத்திய, மாநில போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

மோடி, சீன அதிபர் ஜீ ஜின்பிங் வருவதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்டவை குறித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சண்முகம் தலைமையில்  சென்னை தலைமைச் செயலகத்தில்  ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், டிஜிபி திரிபாதி, உளவு பிரிவு ஐஜி, மாநகர காவல் ஆணையர், விமானப்படை, கடற்படையை சேர்ந்த உயர் அதிகாரிகள், தீயணைப்பு துறை, தகவல் தொழில்நுட்ப துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்ந்த செயலாளர்கள், உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மாமல்லபுரம் வரும் சீன அதிபர் ஜின்பிங் கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலிலும், பிரதமர் மோடி கோவளம் அருகே உள்ள தனியார் ஹோட்டலிலும் தங்குவதால், அதற்கான ஏற்பாடுகள், மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள நிகழ்ச்சிகள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

மாமல்லபுரம் பகுதி கடற்கரை பகுதியாக இருப்பதால் தீவிரவாதிகள் ஊடுருவாமல் தடுக்க விமானபடை, கடற்படை மூலமாக கண்காணிப்பது குறித்தும், வரும் 6ம் தேதி முதல் மத்திய ரிசர்வ் போலீசார் மாமல்லபுரம் பகுதி முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட  இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மாமல்லபுரத்திற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் தீவிர சோதனைக்கு பின்னரே தற்போது அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில், 10ந்தேதி முதல் 15ந்தேதி வரை சுற்றுலா பயணிகளுக்க அனுமதிப்பட மாட்டார்கள் என காவல்துறை வட்டாரத்தில் தகவல் வெளியாகி உள்ளது.