கடந்த ஞாயிறுக் கிழமையன்று, சென்னையில் உள்ள புழுதிவாக்கம், ராமலிங்கம் தெரு அருகே நிலத்தடி வடிகால் குழாய் பதிப்பதற்காக நோண்டப் பட்ட குழியில், 26 வயது மதிக்கத்தக்க வாலிபர் இறந்துக் கிடந்தார்.
புலனாய்வு செய்தப் போலிசார், அவரது கழுத்தைச் சுற்றி இசையைகேட்கும் ஹெட்ஃபோன் கருவியின் வயர் கழுத்தில் சுற்றி இருந்த்தைக் கொண்டு அவர் இசையைக் கேட்டுக் கொண்டே நடந்து கவனக்குறைவில் குழியில் விழுந்து இறந்திருக்கலாம் எனத் தெரிவித்துள்ளனர். அந்தக் குழியின் அருகே எந்த எச்சரிக்கைப்பலகையும் வைக்கப்பட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மடிப்பாக்கம் இன்ஸ்பெக்டர் எஸ் சரவணன், “ஒரு வழிப்போக்கர், அந்தக் குழியில் பிணம்குறித்து தகவல் கிடைத்ததையடுத்து போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு. எட்டு அடி ஆழக் குழியில் வாலிபர் உடல் தண்ணீரில் மிதந்துக்கொண்டிருந்தது.” என்றார்.
அந்த வாலிபரை மடிப்பாக்கம், மண்ணடியம்மன் தெருவைச் சேர்ந்த பி. சிவகுரு, ஒரு தொலைத் தொடர்பு நிறுவனத்தின் ஒரு விற்பனையாளர் எனப் போலிசார் அடையாளம் கண்டுப்பிடித்தனர்.
அவரது பெற்றார் தங்களின் மகனைக் காண வில்லை என்றும், செல்போன் அழைப்புகளுக்கும் பதிலளிக்க வில்லையெனவும் மடிப்பாக்கம் காவல் நிலையத்தை அணுகினர். கிட்டத்தட்ட அதேவேளையில் போலீஸாருக்கு குழியில் மிதக்கும் உடல் பற்றித் தகவல் கிடைத்தது. உடலைக் கைப்பற்றி போலீஸ் பிரேதப் பரிசோதனை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு உடல அனுப்பி வைத்தனர்.
பொதுவாக இசையைக் கேட்பது, உடற்பயிற்சி அல்லது நீண்ட தூரம் நடந்து செல்லும் ஒரு நபர் ஊக்குவிப்பதாக இருக்கும். ஆனால் பொது இடங்களில் இசையைக் கேட்பது பேராபத்து நிறைந்ததாகவும் இருக்கும் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.
இசையைக் கேட்டுக் கொண்டே கவனக்குறைவாகச் செல்பவர்களால் தான் பெரும்பாலான ரயில்வே கிராசிங் விபத்துக்களும், சாலை விபத்துக்களும் ஏற்படுகின்றது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பாதுகாப்பாய் உடற்பயிற்சி செய்ய ஏதுவான இடம் எது ? (சொடுக்கவும்)