coimbature child marriage
தந்தையின் கடனையடைக்க  15 வயதுப் பெண் திருமணம் செய்யவிருந்த நிலையில், கோயம்புத்தூர் அதிகாரிகள் அதனைத் தடுத்து நிறுத்தினர். 
 கோயம்புத்தூரை சேர்ந்த சர்ஜீனா பானு என்னும் 15 வயதுப் பெண்குழந்தை, தன்   தந்தையின் கடனை அடைப்பதற்காக, ஒரு 21 வயது ஆணை கிட்டதட்ட திருமணம் செய்துக் கொள்ளவிருந்தார் . சர்ஜீனாவின் கல்வி அவரது குடும்பத்திலுள்ள நிதி பிரச்சினைகள் காரணமாக ஏற்கனவே நிறுத்தப்பட்டிருந்தது. எனினும், பெண்ணிண் சொந்தக்காரர்கள் சிலர் திருமணத்தை எதிர்த்து சமூக நலத்துறை மற்றும் போலீஸை அழைத்து சனிக்கிழமையன்று திருமணத்தை நிறுத்தினர்.
“ஞாயிறன்று நிச்சயதார்த்தம் மட்டும் தான் நடைபெறுகிறதென எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது, ஆனால் ஞாயிற்றுக்கிழமை அன்று பெண்ணின் திருமணம் நடக்கவிருப்பதாக சனிக்கிழமை தான் எங்களுக்குத் தெரிய வந்தது. நாங்கள் உடனடியாக சமூக நலத்துறைக்குத் தகவல் தந்து திருமணத்தை நிறுத்தினோம்,” என்று சர்ஜீனாவின் மாமா நிஜாமுதீன் கூறினார்.
பையனின் தந்தை அன்வரிடமிருந்து சர்ஜீனாவின் தந்தை அப்துல் அப்பாஸ் வாங்கிய இரண்டு லட்சம் ரூபாய் கடன் தொகையை தள்ளுபடி செய்ய இந்த குழந்தைத் திருமணம் திட்டமிடப்பட்டது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள செட்டிபாளையத்தை சேர்ந்தவர் சர்ஜீனா மற்றுன் கரமகடையைச் சேர்ந்தவர் ரியாஸ். “ரியாஸிற்கு பெண் அமையவில்லை, சர்ஜீனாவின் குடும்பம் கடனைத் திருப்பி செலுத்தும் நிதி நிலையில் இல்லை. எனவே ரியாஸ் தந்தை அப்துல் அப்பாஸிடம் கடனைத் திருப்பி செலுத்துவதற்கு பதிலாக அவர்து மகளை ரியாஸிற்கு திருமணம் செய்து கொடுக்க கேட்டர்” என்று நிஜாமுதீன் கூறினார்.
15 நாட்களுக்கு முன்பு திருமண திட்டங்கள் தொடங்கியது. “பெண் எங்களிடம் பேச அனுமதிக்கப்படவில்லை. பிறகு நாங்கள் அவளிடம், திருமணம் செய்து கொள்ள விருப்பமில்லையெனில், சமூக நலத்துறை உன்னிடம் என்ன செய்ய சொல்கின்றதோ அதை செய் என்றோம், ” என்று நிஜாமுதீன் கூறினார்.
போலீசார் இரண்டு குடும்பங்களிடத்தும், பெண்ணிற்கு 18 வயது ஆகும் வரை, அவளுக்கு திருமணம் நடத்தப்படக் கூடாது என்று ஒரு பத்திரத்தில் கையெழுத்திடச்  செய்துனர். “சமூகநலத் துறையும் அடுத்த மூன்று மாதங்களுக்கு அடிக்கடி வந்து அவளுக்கு திருமணம் நடக்காமல் இருக்க சோதனை செய்வதாக வாக்குறுதி அளித்திருக்கின்றார்கள்,” என்றும் நிஜாமுதீன் கூறினார்.
சர்ஜீனாவின் உறவினர்கள் திருமணத்திற்கு ஆட்சேபித்து அவளது குடும்பத்திடம் அதை தொடர வேண்டாம் என்று கூறினர். “ஆனால் பையனின் குடும்பத்தினர் திருமணத்திற்கு அவசரபடுத்தி நான்கு நாட்களில் எல்லா ஏற்பாடுகளையும் செய்து முடித்தனர்”, என்று நிஜாமுதீன் கூறினார்.
அப்துல் அப்பாஸ் ஒரு பேக்கரி கடை நடத்தி வருகிறார் மற்றும் அவரது மனைவி ராம்லக்மீஷா வீட்டு வேலைகளை கவனித்து கொள்கிறார். இந்த சம்பவத்தில் சர்ஜீனாவிற்கு எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது. ஒரு என்ஜிஓ வெளிப்படையாக வந்து பெண்ணிண் கல்விக்கு நிதியுதவி செய்து அவரது செலவுகளை பார்த்துக் கொள்வதாக முன்வந்துள்ளது.
“எதிர்காலத்தில் சர்ஜீனாவிற்கு 18 வயதிற்குள் திருமணம் நடந்து விடாமல் தடுக்க  நாங்கள் மிகவும் கவனமாக இருப்போம், மீண்டும் அதிகாரிகளை உதவிக்கு அழைக்கத் தயங்க மாட்டோம்,” என்று நிஜாமுதீன் கூறினார்.