இரவுப் பணிபுரியும் பெண்களைச் சூழும் ஆபத்து

Must read

Vaishnavi Rajmohan
Vaishnavi Rajmohan is a biotechnologist by profession and a rationalist by practice. Her writing interests include literature, social and scientific articles.

பெண்களே கவனியுங்கள்!!!!!
night shift 1
இரவு நேரத்தில் பணி புரியும் ஆண்களை விட பெண்களே அதிகம் பாதிக்கப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
மாற்று நேரங்களில் தூங்கி- எழும் வழக்கம் கொண்ட ஆண்கள் மற்றும் பெண்களின் மூளை செயல்பாடு வித்தியாசமாக பாதிக்கப்படுமென என ஆய்வு கூறுகிறது.
பிரிட்டனிலுள்ள சர்ரே பல்கலைகழக ஆராய்ச்சியாளர்கள் 16 ஆண்களையும் 18 பெண்களையும் கொண்டு ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அவர்களை கட்டுப்படான சூழலில் இயற்கை ஒளி மற்றும் இருட்டு தெரியாமல் 28 நாட்களுக்கு வைத்திருந்தனர்.
இது ஜெட்லாக் மற்றும் பணிநேர மாற்றத்தைப் போல் மூளையின் 24 மணி நேரத்திலிருந்து (சர்க்காடியன்) தூங்கி- எழும் வழக்கத்தை திறம்பட மாற்றியது.
விழித்திருக்கும் காலத்தில் ஒவ்வொரு மூன்று மணி நேரமும், பங்கேற்பாளர்கள் பல விதமான சோதனைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர் அதாவது தூக்கம், மனநிலை மற்றும் முயற்சி பற்றிய சுய தகவல் மதிப்பீடுகள், மற்றும் கவனம், மோட்டார் கட்டுப்பாடு மற்றும் ஞாபகசக்தியின் நிலை உட்பட புலன்களின் செயல்திறனை பரிசோதிப்பது என அனைத்தையும் சோதித்தனர்.
மூளையின் மின்சார நடவடிக்கை, தூக்கத்தின் போது தொடர்ந்து கண்காணிக்கப்பட்டது. பல காரணமுள்ள நடவடிக்கைகளின் செயல்திறனை விட விழித்திருக்கும் நேரம் மற்றும் சர்காடியன் கடிகாரத்தின் விளைவுகளுக்கு சுய தகவல் மதிப்பீடுகள் மிகவும் பிரச்சனைக்குரியதாக உள்ளதாக ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இருவருடைய முடிவுகளும் காட்டியது என்று , ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், செயல்திறன் மீதான சர்காடியன் விளைவு ஆண்களை விட பெண்களுக்குத் தான் கணிசமாக வலுவாக இருந்தது, அதாவது அதிகாலை நேரத்தில் அதிகமாக பெண்கள் மந்த புத்தியுடன் இருப்பார்கள் என்பது தற்போதுள்ள நிஜ உலகிலும் பொதுவாக இரவுப் பணியின் இறுதியில் பெண்கள் அப்படி இருப்பதுடனான தற்செயலான நிகழ்வு.
“சர்க்காடியன் கடிகாரத்திற்கு சவாலிடுவது, ஆண்கள் மற்றும் பெண்களின் செயல்திறனை வித்தியாசமாக பாதிக்கும் என நாங்கள் முதல் முறையாக காட்டுகிறோம்,” என்று சர்ரே பல்கலைக்கழகத்தைச் சார்ந்த நயன்தாரா சாந்தி கூறினார்.
“ஷிஃப்ட்வொர்க் தொடர்பான அறிவாற்றல் பற்றாக்குறைகள் மற்றும் மனநிலையில் மாற்றங்கள் ஆகியற்றிற்குத் தொடர்பான எங்களது ஆய்வு கண்டுபிடிப்புகள் குறிப்பிடத்தக்கது.
இந்த முடிவுகளின் அடிப்படையில், ஆண்களை விட பெண்கள் அதிகமாக இரவு நேரப்பணியில் பாதிக்கப்படுகிறார்கள் என்ற கருத்து வெளிப்படும்” என்று சாந்தி கூறினார்.
 

More articles

Latest article