சென்னை: சென்னையில் அதிகனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில்,  அணைகளின் நீர் திறப்பது குறித்து முன்னரே அறிவிக்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்து உள்ளார்.

கடந்த 2015ம் வடகிக்கு பருவமழை காலத்தின்போது சென்னை பேரழிவை சந்தித்தது.  அப்போது பெய்த கனமழை காரணமாக சென்னையை சுற்றியிருந்த ஏரிகளும் நிரம்பிய நிலையில், நள்ளிரவில் ஏரிகள் திறந்து விடப்பட்டால் ஏற்பட்ட வெள்ளத்தின்ல் சென்னை சூழப்பட்டது.  100 ஆண்டுகளில் இல்லாத அளவு ஏற்பட்ட மிகப்பெரிய இயற்கை பேரழிவு  எற்பட்டது. சென்னை நகரம் மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. இதில் பலர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் அப்போதைய  முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான ஆட்சிக்கு கடும் நெருக்கடிகளை ஏற்படுத்தியது.

2015 டிசம்பரில் சென்னையில் ஏற்பட்ட பேரழிவுக்குக் காரணம் “செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் இரவோடு இரவாகத் தண்ணீரைத் திறந்துவிட்டதுதான் வெள்ளத்துக்குக் காரணம்” என்பதை தலைமைக் கணக்காயர் மற்றும் தணிக்கையாளரின் (சிஏஜி) 2016 மார்ச் மாதத்த அறிக்கை குறிப்பிட்டது

அதனால், அதுபோன்ற ஒரு சம்பவம் மீண்டும் ஏற்பட்டு விடக்கூடாது என அடுத்து வந்த ஆட்சியாsகர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்த ஆண்டும், 2015 போல கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து தமிழ்நாடு இரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சென்னையின் அனைத்து பகுதிகளிலும் மழைநீர் தேங்காதவாறு, மோட்டார் பம்புசெட்டுக்களை வைத்து தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதுடன், மழை வெள்ளத்தில் இருந்து பொதுமக்களை காக்க படகுகளையும் சென்னை மாநகராட்சி தயாராக வைத்துள்ளது.

இநத் நிலையில், செய்தியாளர்களை சந்தித்த, நிதியமைச்சர் தங்கம் தென்னரச, மழை காரணமாக அணைகள் நிரம்பினார்,  அந்த அணைகளில் இருந்து நீர்திறப்பு குறித்த விவரங்கள் முன்கூட்டியே மக்களுக்கு தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்து உள்ளார்.

மேலும், இந்த ஆண்டு,  வடகிழக்கு பருவமழையின்போது தமிழ்நாடு முழுவதும், ஒரு உயிர்சேதம் கூட ஏற்படாத வண்ணம், தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் இன்று பல்வேறு துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடந்தது என்றவர்,  மாவட்டத்தில் உள்ள அனைத்து கால்வாய்களையும் சீரமைக்க, அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

பேரிடர் மாதங்களில் மீட்பு நடவடிக்கைகள் முழுவதுமாக மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது. அணைகளின் இருப்பு நிலவரம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அணைகளில் இருந்து எவ்வளவு தண்ணீர் திறக்கப்படுகிறது என்பது குறித்து முன்னரே மக்களுக்கும், ஊடகங்களுக்கும் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது” என  தெரிவித்துள்ளார்.