திருப்பதி

திருப்பதி கோவிலில் பிராமணர் அல்லாத அர்ச்சகர்கள் விரைவில் பணியில் அமர்த்தப்பட உள்ளனர்

அனைத்து சாதியினருக்கும் ஆலயத்தில் அர்ச்சகர் ஆக்க வேண்டும் என்பதை ஒட்டி திருப்பதி கோவிலில் பணி புரிய சுமார் 200 நபர்களுக்கு ஆலய விதிகள், மந்திரங்கள் ஆகியவற்றில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.  அவர்களில் பெரும்பாலோனோர் தலித் மற்றும் பழங்குடியினர் ஆவார்கள்.   இது குறித்து திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரி அனில் சிங்கல் ஒரு தகவல் அளித்துள்ளார்.

அவர், “அர்ச்சகராக பிராமணர் அல்லாதோரை நியமிக்க பல வருடங்களாக முயற்சி செய்யப்பட்டு வந்துள்ளது.  ஆனால் அதற்கு சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அதை நடைமுறைப் படுத்த முடியவில்லை.   தற்போது அவர்கள் உண்மை நிலையைப் புரிந்துக் கொண்டு சம்மதம் அளித்துள்ளனர்.

அதை ஒட்டி தேவஸ்தானம் சுமார் 200 பேரை தேர்ந்தெடுத்து அர்ச்சகர்களுக்கான பயிற்சி அளித்தது.   அவர்களில் பெரும்பாலோனோர் தலித் மக்கள் மற்றும் பழங்குடியினர் ஆவார்கள்.  அவர்கள் இப்போது பயிற்சி முடிந்து பணி புரிய தயாராக உள்ளனர்.  விரைவில் அவர்கள் பணியில் அமர்த்தப் படுவார்கள்” என தெரிவித்துள்ளார்.