துருவங்கள் பதினாறு ரிலீஸ் தேதி மாற்றம்

Must read

அறிமுக இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடிகர் ரகுமான் நடித்துள்ள படம் ‘துருவங்கள் பதினாறு’. இப்படத்தை நைட் நாஸ்டால்ஜியா நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு ஜேம்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இப்படத்தை டிசம்பர் 30ம் தேதி வெளியிடுவதாக இருந்த படக்குழுவினர் தற்போது டிசம்பர் 29ம் தேதியே வெளியிடப்போவதாக அறிவித்துள்ளனர். ட்ரீம் ஃபேக்டரி நிறுவனம் இப்படத்தை வெளியிடவுள்ளது.
இப்படத்தைப் பற்றி இயக்குனர் கூறியதாவது,“போலீஸ் அதிகாரியாக இருக்கும் ரகுமான் ஒரு விபத்தில் தன்னுடைய ஒரு காலை இழந்து விருப்ப ஓய்வில் இருக்கிறார். தூசி படிந்த வழக்கை தனி நபராக விசாரிக்க தொடங்குகிறார். அப்போது நடக்கும் சம்பவங்கள்தான் படத்தின் கதை” என்கிறார் இயக்குனர் கார்த்திக் நரேன்.

More articles

Latest article