சென்னை,

ஓக்ஷி புயல் உருவாக்கம் காரணமாக கன்னியாகுமரியில் பெரும் சூறாவளி காற்று வீசி வருகிறது. இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் காற்றின் தாக்கம் குறித்த வீடியோ வெளியிட்டுள்ளார்.

வங்கக்கடலில் புயலாக மாறி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, கன்னியாகுமரி பகுதியில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்மேற்கு வங்கக் கடலில் 210 கி.மீ. தூரத்தில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக மாற வாய்ப்பு உள்ளதாகவும்,  இதன் காரணமாக 38 மணி நேரத்திற்கு கனமழை தொடர்ந்து பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் தமிழ்நாடு வெதர்மேனும் தனது முகநூல் பக்கத்தில் கன்னியாகுமரியில் ஓக்ஷி புயலின் காரணமாக பயங்கர சூறைக்காற்று வீசும் என்றும், இந்த காற்று மணிக்கு 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்றும், பொதுமக்கள் யாரும் மரத்தின் அடியில் ஒதுங்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தி உள்ளார்.

மேலும்,  கன்னியாகுமரி கடற்கரையோர பகுதிகளில் அதிகமான காற்று வீசுவதால்,  நீ உன் வீட்டிற்குள் இருப்பது பாதுகாப்பானது. கன்னியாகுமரி கடற்கரையுடன் ஒக்ஷி சூறாவளியை எப்படி சுழன்று செல்கிறது என்பதை ராடாரில் மட்டுமே பார்க்க முடியும்.

இந்த காற்றின் காரணமாக மரங்கள் வேரோடு பிடுங்கி எறியப்படும்.  நீங்கள் வீட்டிலேயே தங்கியிருந்தாலும், பாதுகாப்பாக இருப்பது நல்லது. மரங்களின் கீழ் நிற்க வேண்டாம். குறிப்பாக ரப்பர் மரங்கள் கீழே யாரும் ஒதுங்க வேண்டாம். இந்த மரங்கள் சூறைக்காற்று காரணமாக எளிதில் பிடுங்கப்பட்டுவிடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அந்த வீடியோ:

https://www.youtube.com/watch?v=UA9OguB_e2A&feature=youtu.be

Thanks: https://www.facebook.com/tamilnaduweatherman/