சென்னை: மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று புயலாக உருவெடுத்துள்ளது. இதற்கு மிதிலி என பெயரிடப்பட்டு உள்ளது. இந்த புயல் நாளை வங்க தேசத்தில்  கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மத்திய மேற்கு வங்க கடலில்  கடந்த 14ந்தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. அது மேலும் வலுவடைந்துபுயலாக வலுப்பெற்றுள்ளது. இதற்கு மிதிலி என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இதுழ நாளை  நவம்பர் 18ம் தேதி காலை வங்கதேசத்தின் மோங்லா – கேபுபரா இடையே கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த புயல்,  ஒடிசா மாநிலம் பாராதீப்பில் இருந்து 200 கி.மீ. தொலைவில் மிதிலி புயல் நிலை கொண்டுள்ளது. சுமார் 60 முதல் 70 கி.மீ. வேகத்தில் புயல் கரையை கடக்கும் என தெரிவித்துள்ளது.

முன்னதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளிட்டுள்ள செய்தி குறிப்பில், “இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் தனமழை பெய்யவாய்ப்புள்ளது. மேலும் வடமேற்கு மற்றும் வடகிழக்கு வங்கக்கடல் பகுதிகள், மேற்கு வங்கம் மற்றும் அதை ஒட்டிய வங்கதேச கடலோரப்பகுதிகளில் இன்று குறாவளிக்காற்று மணிக்கு 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 80 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். ஒடிசா கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மத்திய வங்கக்கடல் பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டிருந்தது.

புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்: வங்கக் கடலில் மிதிலி புயல் உருவாகியுள்ள நிலையில், சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 9 துறைமுகங்களிலும் 2 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.