மும்பை: இந்தியாவில் குழந்தைகளுக்கு எதிரான சைபர் குற்றங்கள் 261 சதவீதம் அதிகரித்துள்ளதாக தரவுகள் தெரிவிக் கின்றன. இது கடந்த 2020-ம் ஆண்டில் நடைபெற்றுள்ளது.

தேசிய குற்ற ஆவண அமைப்பு (என்சிஆர்பி) ஆண்டுதோறும் நாட்டின் குற்றங்கள், வழக்குகள் தொடர்பான ஆவணங் களை ஆய்வு செய்து  வெளியிடுகிறது. அதன்படி கொரோனா தொற்று காலம் தொடங்கிய 2020ம் ஆண்டில்  இணைய வழியிலான குற்றங்கள் 261 சதவிகிதம் அதிகரித்துள்ளது என தெரிவித்து உள்ளது.

இதுதொடர்பாக என்சிஆர்பி வெளியிட்டுள்ள தகவலில், நாடு முழுவதும் இணைவழி சேவைகள் அதிகரித்து உள்ளதால், இணையவழி குற்றங்களும் அதிகரித்து உள்ளன. கொரோனா தொற்று பொதுமுடக்கம் காலத்தில் பெரும்பாலோர் இணையத்திலேயே மூழ்கியதால், குற்றச்சம்பவங்களும் அதிகரித்து உள்ளது என தெரிவித்து உள்ளது.

‘ஊரடங்கு காலத்தில் இணைய தளங்களை குழந்தைகள் பார்ப்பது அதிகரித்துள்ளது. அத்துடன், குழந்தைகள் தொடர் பான ஆபாச வீடியோக்களும் அதிக அளவில் உருவாகி உள்ளன. இதில் பெரும்பாலான வீடியோக்கள் சம்பந்தப்பட்ட குழந்தைகளின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவர்களுக்கு தெரிந்த நபர்களே பதிவு செய்துள்ளனர்’ என்றனர்.

இது வழக்கமானதை விட 2020ம் ஆண்டில்  261 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும், ஆனால், இதுதொடர்பான புகாரில், வெறும்  116 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இதுவரை  ஒருவர் மட்டும்குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு இருப்பதாக வும் அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளது.

இணையவழி குற்றங்களில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது. அங்கு அதிகபட்சமாக 207 வழக்குகள் பதிவாகி உள்ளன. இந்த மாநிலத்தில் 2019-ம் ஆண்டில் பதிவான 70 வழக்குகளுடன் ஒப்பிடும்போது இது 196 சதவீதம் அதிகம் ஆகும். 2019-ல் முதலிடத்தில் இருந்த உத்தரபிரதேசம் 2020-ல் 197 வழக்குகளுடன் 2-ம் இடத்தில் உள்ளது.

கர்நாடகா (144), கேரளா (126), ஒடிசா (71), ஆந்திரா (52) ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.