கோல்ட் கோஸ்ட்

ஸ்திரேலியாவில் நடைபெறும் காமன்வெல்த் 2018 போட்டியில் இந்தியா வின் பூனம் யாதவ் எடைதூக்கும் போட்டி 69கிலோ பிரிவில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டிகளில் நான்காம் நாளான இன்று மகளிர் பளுதூக்கும் போட்டி நடைபெற்றது.

இதில் 69 கிலோ பிரிவில் 222 கிலோ எடையைத் தூக்கி இந்தியாவின் பூனம் யாதவ் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

இந்தப் போட்டியில் இந்தியா இதுவரை 5 தங்கப் பதக்கங்கள் வென்றுள்ளது.