மும்பை:

மும்பை விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் பல கட்டடங்கள் விதி மீறி அதிக உயரத்துடன் கட்டப்பட்டுள்ளது. இது விமான பறக்கும் பாதைக்கு இடையூறாக இருப்பதை விமான போக்குவரத்து துறை ஆணையம் கண்டுபிடித்துள்ளது. இது தொடர்பாக வில்லே பார்லே, சாந்தா குரூஸ், கத்கோபார் பகுதிகளில் உள்ள 70 கட்டங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

60 நாட்களுக்கு இந்த கட்டடங்களில் உயரத்தை குறைக்க வேண்டும் என்று அதில் கெடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் புதிதாக கட்டப்பட்ட கட்டங்கள் மட்டுமின்றி 50 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட சில இரண்டு அடுக்கு மாடி கட்டடங்களும் இடம்பெற்றுள்ளது.

பெரும்பாலான பழைய கட்டடங்களுக்கு சம்மந்தப்பட்ட துறையின் உயரத்திற்கான தடையில்லா சான்று பெறப்பட்டுள்ளது. கடந்த 1978ம் ஆண்டு தான் விமானநிலைய ஆணையம் தடையில்லா சான்று வழங்கும் திட்டத்தை தொடங்கியது.

புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் அதிக உயரங்களுடன் இருப்பதால் பெரும்பாலான பகுதிகள் இடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கான உத்தரவுகள் கடந்த மாதத்தில் பல தேதிகளில் அனுப்பப்பட் டுள்ளது.

மேலும், உயரத்திற்கான தடையில்லா சான்று பெற்ற 45 கட்டடங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த கட்டடங்களுக்கு விமானநிலைய ஆணைய அதிகாரிகள் போலியாக தடையில்லா சான்று வழங்கியிருப்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

பழைய கட்டடங்களில் 1 முதல் 6 மீட்டர் வரை உயரம் குறைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. விமானங்கள் பறக்கும் பாதைகளில் உள்ள தடங்கல்கள் குறித்த பட்டியலை தாக்கல் செய்யும் மாறு விமானநிலைய ஆணைத்துக்கு மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆயிரகணக்கான வீடுகளை இடிக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்திருந்தது.

கடந்த வாரம் 10 கட்டடங்களின் பிரதிநிதிகள் இணைந்து அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விவாதித்தனர். இவர்கள் அனைவரும் இரண்டு அடுக்கு மாடி வீடுகளை கொண்டிருப்பவர்கள்.

‘‘மும்பை விமான நிலையம் தொடங்கப்பட்டு 20 ஆண்டுகள் கழித்து கடந்த 1960ம் ஆண்டுகளில் இந்த கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளது. 2 குறுக்கு ஓடுதள பாதை மற்றும் ஒரு டெர்மினலுடன் விமானநிலையம் செயல்பட்டு வருகிறது.

கடந்த 50 ஆண்டுகளாக இது தொடர்பாக எவ்வித தொடர்புகளையும் விமானநிலைய ஆணையம் மேற்கெ £ள்ளவில்லை. 2016ம் ஆண்டில் தான் கட்டட உயரம், தூரம் தொடர்பான கடிதங்களை விமானநிலைய ஆணையம் அனுப்பியுள்ளது. விமானநிலைய சுற்றுவட்டார பகுதிகளில் இந்த கட்டடங்களை விட அதிக உயரம் கொண்ட மிலன் மேம்பாலம், பனை மரங்கள் உள்ளது’’ என்று குடியிருப்பு வாசிகள் கூறுகின்றனர்.

இந்த கட்டடங்களில் வசிக்கும் முதியவர் ஒருவர் கூறுகையில்,‘‘ நான் 1967ம் ஆண்டு முதல் இங்கு வசி க்கிறேன். ஆனால் இப்போது தான் விதிமீறல் இருப்பதாக கூறுகிறார்கள். தற்போது இந்த வயதில் நாங்கள் எங்கே செல்வோம். இந்த வயதில் நாங்கள் புதிதாக ஒரு ஃப்ளாட் வாங்குவது எப்படி சாத்தியமாகும்’’ என்றார்.