புதுடெல்லி: உஸ்பெகிஸ்தான் நாட்டுப் பெண்ணிடம் பாலியல் ரீதியாக முறைகேடாக நடந்துகொண்ட டெல்லி விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அந்தப் பெண்மணி, தனது உறவினரின் மருத்துவ சிகிச்சைக்காக இந்தியா வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் குற்றத்தை கண்காணித்த ஒருவர் அளித்தப் புகாரின் அடிப்படையில் இதுதொடர்பான விசாரணை மேற்கொள்ளப்பட்டு, சம்பந்தப்பட்ட குற்றவாளிகளான அந்த சுங்கத்துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

மேலும், இதுதொடர்பான பெயர் தெரிவிக்கப்படாத குற்றச்சாட்டு, மின்னஞ்சல் மூலமாக வருவாய்த்துறை செயலர் அஜய் பூஷன் பாண்டேவின் அலுவலகத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இந்த விஷயத்தை அதிக கவனம் எடுத்த விசாரிக்குமாறு அதில் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.

சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை அளிப்பதன் மூலமாக, பிற அரசு ஊழியர்களுக்கும் உதாரணமாக அந்த நடவடிக்கைத் திகழ வேண்டும் என்று வருவாய்த்துறை சார்பில் இந்தப் புகாருக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரில், “ஆட்டின் போர்வையில் இருக்கும் ஓநாய்கள்” என்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.