சென்னை: கொரோனா தொற்று பரவல் அதிகரித்தாலும் தமிழகத்தில் தற்போதைக்கு புதிய கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கும் திட்டம் இல்லை என்று கூறிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் முக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என வலியுறுத்தினார்.

நாடு முழுவதும் தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று 12ஆயிரமாக இருந்த பாதிப்பு இன்று 17ஆயிரமாக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டிலும் பாதிப்பு ஆயிரத்தை கடந்துள்ளது. இதன்மூலம் தமிழ்நாட்டில்  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34 லட்சத்து 64 ஆயிரத்து 131 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 497 பேருக்கும்,  செங்கல்பட்டில் 190 பேருக்கும், கோவையில் 50 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது இதுவரை கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 38,026 ஆக உள்ளது என சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இநத் நிலையில், இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தபோது,  “தமிழகத்தில் அதிகரித்தாலும் தற்போதைக்கு புதிய கட்டுப்பாடுகள் இல்லை.  குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் போது அறிகுறி இருக்கிறதா என கண்காணிக்க வேண்டும். குழந்தைகளுக்கு சளி ,காய்ச்சல் , தொண்டை எரிச்சல் இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.பொதுமக்கள் அவசியம் முகக்கவசம் அணிய வேண்டும்” என்றார். தொடர்ந்து பேசிய அவர், கொரோனா பாதிக்கப்பட்ட 92 சதவீதம் பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர் 18 சதவீதம் பேர் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றார். கொரோனாவால் உயிர் பாதிப்பு குறைவாகவே உள்ளது; மக்கள் எச்சரிக்கையாக இருந்தாலே போதும் என அமைச்சர் வலியுத்தினார்.