டெல்லி:

பணமதிப்பிழப்பு அமல்படுத்தப்பட்டு 100 நாட்களை கடந்தும் நாட்டில் உள்ள 2.2 லட்சம் ஏ.டி.எம்.களில் 30 சதவீதம் பணமில்ல £மல் முடங்கி கிடக்கிறது.
பணமதிப்பிழப்பு அறிவிப்புக்கு முன் தினசரி புழக்கத்தில் இருந்த 13 ஆயிரம் கோடி ரூபாய் தற்போது 12 ஆயிரம் கோடியாக குறை ந்துள்ளது.

பணம் முழுவதும் உ.பி. உள்ள தேர்தல் நடைபெறும் பகுதிகளுக்கு திருப்பிவிடப்பட்டிருப்பதால் பண புழக்கமின்றி டெல்லியில் அதிகளவில் பண பற்றாகுறை நிலவுகிறது. டெல்லியில் பணமின்றி முடங்கிய ஏ.டி.எம்.களின் எண்ணிக்கை கடந்த ஒரு வாரத்தில் மேலும் அதிகரித்துள்ளது.

‘‘மீண்டும் ஒரு பண தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதற்கு உ.பி.தேர்தலை தவிர வேறு எந்தவித காரணமும் சொல்ல முடியவில்லை. டெல்லி தவிர இதர மாநிலங்களில் பண புழக்கம் ஏறக்குறைய சீராக இருக்கிறது’’ என்று வங்கி நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

மேலும், அவர் கூறுகையில்‘‘வெளி இடங்களில் இருக்கும் ஏ.டி.எம்.களில் வங்கி பணி நேரத்திற்கு பிறகு பணம் நிரப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்து. பணம் எடுப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டை விலக்கியதை தொடர்ந்தே ஏ.டி.எம்.களின் வெளியே நீண்ட வரிசை இருப்பதை பார்க்க முடிகிறது’’ என்றார்.

‘‘பணமதிப்பிழப்பு அறிவிப்பால் முடக்கப்பட்ட ரூ. 15.44 லட்சம் கோடி பணத்துக்கு பதிலாக ரிசர்வ் வங்கி ரூ. 10 லட்சம் கோடி மட்டுமே புழக்கத்தில் விட்டுள்ளது. பண தட்டுப்பாடுக்கு இதுவும் ஒரு காரணமாக உள்ளது. புழக்கத்தில் விடப்பட்ட ரூபாய் நோட் டுக்களில் 78 முதல் 88 சதவீத பணம் புழக்கத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த மாத இறுதிக்குள் இது மீண்டும் புழக்கத்திற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது’’ என்று எஸ்பிஐ தெரிவித்துள்ளது.

‘‘தற்போது மீண்டும் எவ்வளவு பணம் புழக்கத்தில் விடப்பட்டுள்ள என்பதை ரிசர்வ் வங்கி துல்லியமாக தெரிவிக்க வேண்டும். நூறு நாட்களை கடந்தும் ஏன் பண தட்டுப்பாடு நிலவுகிறது என்பதை அறிந்து கொள்ளும் உரிமை ஒவ்வொரு இந்தியனுக்கும் உள்ளது’’ என்று அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க பொதுச் செயலாளர் வெங்டாச்சலம் தெரிவித்துள்ளார்.