மும்பை:

காராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து உள்ள நிலையில், வரும் 30-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 1,035 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்னர். கடந்த 24 மணி நேரத்தில் 40 பேர் உயிரிழந்துள்ளனர்.  இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,477 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இதன்மூலம், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 239 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் மகாராஷ்டிரா உள்ளது. அங்கு இதுவரை 1,200-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று மட்டும் 10 தனியார் மருத்துவமனைகளைச் சேர்ந்த மருத்துவர்கள் உள்பட 90 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், இன்று பிரதமருடன் நடந்த ஆலோசனையைத் தொடர்ந்து, மாநிலத்தில், ஏப்ரல் 30-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டிப்பதாக முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் ஊரடங்கை தற்போது தளர்த்த முடியாது எனக் கூறிய அவர், மாநிலம் முழுவதும கொரோனா தடுப்பு வளையங்களை அறிவிக்க இருப்பதாகவும் தெரிவித்து உள்ளார்.

ஏற்கனவே, ஒடிசா, பஞ்சாப் மாநிலங்கள் ஊரடங்கை 30ந்தேதிவரை நீட்டித்துள்ளது குறிப்பிடத்தக்கது.