கடலூர்:

த்திய அரசை எதிர்த்து, கடலூர் பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு பூட்டு போட்டு பூட்டினர் தமிழக வாழ்வுரிமை கட்சியினர். இதன் காரணமாக போராட்டத்தில் ஈடுபட்ட 60 பேரை போலீசார் கைது செய்தனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை எதிர்த்து தமிழகம் முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

திமுக உள்பட கூட்டணி கட்சியினர் பல இடங்களில் சாலை மறியல், ரயில் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில்,  கடலூரில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் மத்திய அரசுக்கு எதிராக மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு போராட்டம் நடத்தினர்.

அப்போது, கடலூரில் உள்ள  பாஸ்போர்ட் அலுவலகத்தை முற்றுகையிட்டு பூட்டுபோட்டனர். இதன் காரணமாக பரபரப்பு ஏற்பட்டது.

அதைத்தொடர்ந்து அங்கு வந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட  தமிழக வாழ்வுரிமை கட்சியினர் 60 பேரை கைது செய்தனர்.