சென்னை

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் ஹஸ்ஸி தற்போது அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப் பட்டுள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 வருட தடைக்குப் பின் மீண்டும் களமிறங்க உள்ளது.    இந்த அணி ஏற்கனவே 2008 முதல் 2015ஆம் ஆண்டுவரை நடைபெற்ற 8 சீசன்களில் ப்ளே ஆஃப் க்கு தகுதி பெற்றதும் இரு முறை சாம்பியன் பட்டத்தை வென்றதும் குறிப்பிடத் தக்கது.   இருமுறை இரண்டாம் இடத்தையும் இந்த அணி பிடித்துள்ளது.

ஒவ்வொரு அணியும் வீரர்களை தக்க வைக்கும் நடைமுறைக்கு ஐ பி எல் அனுமதி வழங்கியது.   சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோனி, ரெய்னா, ஜடேஜா ஆகியோரி தக்க வைத்துள்ளது.   அத்துடன் இந்த அணியின் பேட்டிங் பயிற்யாளராக இந்த அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் ஹஸ்ஸி நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் கடந்த 7 சீசன்களாக மைக்கேல் ஹஸ்ஸி விளையாடியுள்ளார்.    இந்த அணியில் அதிகம் ரன் குவித்தவர்கள் பட்டியலில் இவர் 1768 ரன்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.    முதலிடத்தில் சுரேஷ் ரெய்னா (3699 ரன்கள்) மற்றும் இரண்டாம் இடத்தில் தோனி, (2987 ரன்கள்) ஆகியோர் உள்ளனர்.