சென்னை: தோனி இல்லாமல் சி.எஸ்.கே கிடையாது என்று கூறிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் சீனிவாசன், சென்னையில் ஐபிஎல் கோப்பை வெற்றிவிழா முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என்று கூறினார்.
நடப்பாண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டி, சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இடையே துபாயில்நடைபெற்றது. இதில், 27 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற சிஎஸ்கே அணி வெற்றி பெற்று கோப்பையை தட்டிச்சென்றது. ஐபிஎல் தொடர்களில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி தலைமையில் 4-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சீனிவாசன் கடந்த ஆண்டு ஐபிஎல் கோப்பை வாங்க முடியாத நிலையில் இந்த ஆண்டு சென்னை அணி வெற்றி பெறும் என நம்பிக்கை தோனி தெரிவித்தார். அதன்படி, வெற்றிக்கோப்பையை பெற்று தந்துள்ளார்.
சிஎஸ்கே வெற்றியை பிரமாண்டமாக கொண்டாட முடிவு செய்துள்ளோம். தற்போது தொடங்க உள்ள உலக கோப்பை போட்டி முடிந்ததும் தோனி சென்னை வருவார். அப்போது, ஐபிஎல் கோப்பையை வென்ற தோனி மற்றும் சிஎஸ்கே அணியினருக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பாராட்டு விழா நடைபெற உள்ளது. இந்த பாராட்டு விழாவை சேப்பாக்கம் மைதானத்தில் நடத்த திட்டமிடப்பட்டு வருகிறது என்றார்.
அப்போது செய்தியாளர்கள், தோனி 2021ம் ஆண்டு ஐபிஎல் போட்டியிலும் இடம்பெறுவாரா என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்தவர், சி.எஸ்.கே இல்லாமல் தோனி கிடையாது. தோனி இல்லாமல் சி.எஸ்.கே கிடையாது என்றார்.
‘சிங்கங்கள் மீண்டும் கர்ஜித்தன…!’ சிஎஸ்கே வெற்றி குறித்து முதல்வர் ஸ்டாலின் சிலாகிப்பு…