சென்னை: ஐபிஎல் போட்டிகள் சென்னையில் நடைபெறும் நாட்களில் போட்டிகளை காண செல்பவர்களுக்கு இலவச பேருந்து பயணத்தை தமிழ்நாடு அரசு அறிவித்தது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்திய நிலையில்,  இந்த போட்டிகளில் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்து போட்டியில் இருந்து வெளியேறியதால், தமிழ்நாடு அரசு இலவச பேருந்து பயண அறிவிப்பை ரத்து செய்துள்ளது.

இனிமேல், சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளை காண செல்பவர்களுக்கு   மாநகரப் பேருந்துகளில் சலுகை பயணம் கிடையாது என அறிவிக்கப்பட்டு உள்ளது.

சர்வதேச கிரிக்கெட் ரசிகர்களின் திருவிழாவாக கொண்டாடப்படும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர்  மார்ச்  22 ஆம் தேதி  முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன்ரைசர்ஸ் ஐதராபாத், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ் என மொத்தம் 10 அணிகள் மோதவுள்ளன. .ஒட்டுமொத்தமாக ஐபிஎல் கிரிக்கெட் தொடர் 74 போட்டிகளைக் கொண்டதாக நடத்தப்படும்.  74 லீக் போட்டிகளின் அடிப்படையில் முதல் 2 அணிகள் குவாலிஃபையர் 1 எனப்படும் தகுதி போட்டிக்கு முன்னேறும். இவ்விரு அணிகளில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு நேரடியாக செல்லும்

முதல் போட்டியானது, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில்  தொடங்கியது. தொடர்ந்துசிஎஸ்கே எதிர்கொள்ளும்  பல்வேறு போட்டிகள் சென்னையில் நடைபெற்றது. இந்த போட்டிகளை காண சென்னை மக்களுக்கு இலவச பேருந்து சேவையை தமிழ்நாடுஅரசு வழங்கியது. அதாவது,  கிரிக்கெட் போட்டியை காண செல்பவர்கள்,தங்களது ஆன்லைன் டிக்கெட்டைக் காட்டி மாநகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணம் செய்துகொள்ளலாம் எனத் தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அறிவித்திருக்கிறது.  அதாவத,  ஐபிஎல் போட்டிகளைக் காண வருபவர்களுக்கு மாநகரப் பேருந்துகளில் கட்டணமில்லை.

ஏற்கனவே நஷ்டத்தில் இயங்கி வரும் போக்குவரத்து கழகம், ஆடம்பர விளையாட்டான  கிரிக்கெட் போட்டிகளை காண, பல ஆயிரம் கொடுத்து டிக்கெட் எடுப்பவர்களுக்கு எதற்கு இலவச பேருந்து என சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வந்தது. இதையடுத்து பேருந்து கட்டணத்தை சிஎஸ்கே நிர்வாகம் ஏற்பதாகஅறிவிக்கப்பட்டது. இதற்கிடையில்,  கடந்த ஆட்டத்தின்போது, சிஎஸ்கே அணி பெங்களூரு அணியிடம் மோதி தோல்வி அடைந்து, போட்டியில் இருந்து வெளியேறியது.

இதைத்தொடர்ந்து, இனி சென்னை ஸ்டேடியத்தில் நடைபெறும் போட்டிகளை காண செல்பவர்களுக்கு இலவச பேருந்து பயணம் சேவை கிடையாது என அறிவிக்கப் பட்டு உள்ளது.

ஐபிஎல் குவாலிபையர்2 மற்றும் ஐபிஎல் இறுதி போட்டிகள் வரும் 24, 25ந்தேதிகளில் சென்னை சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற ள்ளது. இந்த போட்டிகளை காண செல்பவர்களுக்கு மாநகர பேருந்துகளில் சலுகை பயணத்துக்கு அனுமதி இல்லை. பயணிகள் பயண கட்டணம் செலுத்தி பயணச்சட்டு பெற்றுக்கொள்ளுமாறு மாநகர பேருந்து நிர்வாகம் அறிவித்து உள்ளது.

2024 ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற உள்ளது. அந்த இறுதிப் போட்டிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதல் அணியாக தேர்வாகி உள்ளது. இந்த நிலையில் இலவச பேருந்து க