டெல்லி சிஆர்பிஎப் படை பிரிவில் 46 பேருக்கு கொரோனா பாதிப்பு; ஒருவர் உயிரிழப்பு

Must read

புதுடெல்லி:

டெல்லி சிஆர்பிஎப் படை பிரிவில் 46 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து அந்த படைப்பிரில் பணியாற்றி வந்த ஆயிரம் பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த இரண்டு நாட்களில் டெல்லியின் மயூர் விஹார் பகுதியில் கொரோனா பாதிப்புக்குள்ளாகி உள்ளவர்களின் எண்ணிகை வேகமாக அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் மண்டிவாலியில் உள்ள சிஆர்பிஎப் படை வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அசாம் மாநிலத்தை சேர்ந்த 55 வயதான வீரர் ஒருவர் நேற்று முன்தினம் சப்தர்ஜங் மருத்துவமனையில் உயிரிழ்ந்தானர். இவருக்கு நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதே 31-வது பட்டாலியன் பிரிவில் மேலும் 23 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் எல்லைப் பாதுகாப்பு படை மற்றும் பிற ராணுவ பிரிவுகளில் பணியாற்றும் வீரர்கள் சிலருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் இதுவரை 1,007 பேர் கொரோனா பாதிப்புக்குள்ளாகி உயிரிழந்துள்ளனர் நிலையில், 31 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

More articles

Latest article