சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் விசாரணை நடத்திய ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி இன்று 5வருடமாக நடத்திய விசாரணை அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தாக்கல் செய்தார். இதையடுத்து செய்தியளார்களை சந்தித்தபோது, சசிகலா தரப்பு விசாரணைக்கு  முழு ஒத்துழைப்பு கொடுத்ததாக குட் சர்டிபிகேட் கொடுத்துள்ளார். இதனால், இந்த ஆணையத்திற்காக செலவழிக்கப்பட்ட பல கோடி ரூபாய் வேஸ்ட் என தெரிகிறது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி கந்த 2017 ஆம் ஆண்டு தமிழக அரசு ஆறுமுகசாமி ஆணையத்தை நியமித்தது ஆறுமுகசாமி ஆணையம்.  கடந்த ஐந்து ஆண்டுகள் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி இன்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.   இதனிடையே அப்பல்லோ மருத்துவமனை உச்ச நீதிமன்றத்தில் பெற்ற இடைக்கால தடையின் காரணமாக இரண்டு ஆண்டுகள் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை மேற்கொள்ளாமல் இருந்தது. இதையடுத்து மீண்டும் விசாரணை தொடங்கிய ஆணையமானது இன்று தனது அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.

சரி, செய்தியாளர்களிடம் ஓய்வுபெற்ற  நீதிபதி இன்று என்ன கூறினார் என்று பார்க்கலாம்.  ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்கு இவ்வளவு கால தாமதம் ஆனதாக கூறுவதை ஏற்க முடியாது என்று கூறியதுடன், ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையை காலதாமதம் செய்யவில்ல  என்று மறுத்ததுடன், இந்த விசாரணை தொடர்பாக ஒரு ஆண்டில் 149 சாட்சிகளிடம் விசாரணை நடத்தியதாகவும் மனுதாரர் உட்பட 154 பேரிடம் ஆணையம் விசாரணை நடத்தப்பட்டது என்றும் தெரிவித்தார்.

மேலும்,  ஜெயலலிதாவை  சசிகலா, அவரது போயஸ் கார்டனில் இருந்து அப்போலோ மருத்துவமனைக்கு கொண்டு வந்த விதத்தில் சந்தேகத்தன்மையான எதுவும் இல்லை அதனால் அவரது வீட்டிற்கு சென்று ஆய்வு செய்யவில்லை என்றவர், ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன் அவரது  உடல்நிலை எப்படி இருந்தது என்பதில் தொடங்கி விசாரணை நடைபெற்றது .

சசிகலா நேரில் வர தயார் இல்லை என எழுத்துப்பூர்வமாக கடிதம் கொடுத்ததால் அவரை நேரில் அழைக்கவில்லை. அபிடவிட் தாக்கல் செய்ததால், அவரை விசாரணைக்கு ஆஜராக வற்புறுத்த முடியாது  என்றவர், அவரை கட்டாயப்படுத்தி வரவழைக்க முடியாது என்றும், ஆனால்,  விசாரணைக்கு சசிகலா தரப்பு முழு ஒத்துழைப்பு கொடுத்தனர் என்றும் கூறினார்.

அதுபோல, அறிக்கையில் என்ன உள்ளது என்ற கேள்விக்கு, அதை வெளியே கூற முடியாது என்றவர் விசாரணை அறிக்கை,   500 பக்கங்கள் ஆங்கிலத்திலும், 608 பக்கங்கள் தமிழிலும் அதாக்கல் செய்யப்பட்டுள்ளது  என்றும், ஒவ்வொருவரின் சாட்சியமும் அதிக பக்கங்களை கொண்டது என்றும் தெரிவித்துள்ளார்.

 நீதிபதி ஆறுமுகசாமியின் இன்றைய செய்தியாளர்களை சந்திப்பை  பார்க்கும்போது, கடந்த 5 வருடமாக நடைபெற்ற ஆணைய விசாரணை அறிக்கை மீது பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளது.

ஜெயலலிதா  சிகிச்சையின்போது, உடன் இருந்தவர் சசிகலா மட்டுமே. அவரிடம் ஆணையம் விசாரணை நடத்தாத நிலையில், அவரது பிரமாண பத்திரம் மட்டுமே ஏற்கப்பட்டது.

ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அப்போலோ மருத்துவமனையில் இருந்த சிசிடிவிக்களை அகற்றச்சொன்னதும் சசிகலா என்றே கூறப்பட்டது.  ஜெயலலிதா எப்படி இருக்கிறார் என்பது குறித்து அப்போதைய அமைச்சர்கள் என எவருக்கும் தகவல் தெரிவிக்க தடை விதித்ததும் சசிகலாதான்.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, ஓபிஎஸ்-இடம் இருந்து முதல்வர் பதவியை பிடுங்கி, முதல்வராக முயற்சித்ததும் இதே சசிகலாதான். பின்னர் சசிகலாவுக்கு எதிராக, ஜெயலலிதா சமாதியில் தர்மயுத்தம் நடத்திய ஓபிஎஸ், தற்போது சசிகலாவுடன் இணக்கமாக உள்ளார்.

அதுபோல, எய்ம்ஸ் மருத்துவமனையும், அப்போலோவுக்கு ஆதரவாகவே அறிக்கை கொடுத்துள்ளது.

இந்த நிலையில், சசிகலா தரப்பு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தாக நீதிபதி ஆறுமுகசாமி கூறியிருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளது.  ஆணைய அறிக்கை ஜெயலலிதா மரணத்தில் எந்தவித சந்தேகமும் இல்லை என்பதை ஊர்ஜிதம் செய்வது போலத்தான் இருக்கும் என நம்பப்படுகிறது.

அப்போலோவில்   75நாட்கள் சிகிச்சை பெற்ற ஜெயரலலிதாவுக்கு என்ன சிகிச்சை வழங்கப்பட்டது, சிசிடிவி காமிராக்களை ரிமூவ் செய்ய சொன்னது ஏன்? ஜெயலலிதா என்ன சிகிச்சை பெற்றார், உண்மையிலேயே அவர் உயிருடன்தான் இருந்தாரா என்பதற்கு ஏதாவது ஆதாரம் விசாரணையில் அறிக்கையில் இருக்குமா என்பதும் கேள்விக்குறியாகத்தாகத்தான்  உள்ளது.

மொத்தத்தில் ஓய்வுபெற்ற நீதிபதியின் இன்றைய பேட்டியை பார்க்கும்போது, இந்த ஆணையம் கடந்த 5 வருடமாக நடத்திய விசாரணையும், சசிகலாவுக்கு குட் சர்டிபிகேட் கொடுக்க மட்டுமே பயன்படுத்தப்பட்டது போல் தெரிகிறது. இதற்காக  பல கோடி ரூபாய் மக்கள் பணம் வீணடிக்கப்பட்டு உள்ளது என்பது மட்டுமே தெளிவாகிறது.