சென்னை:

திமுக குறித்து விமர்சனம் செய்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசனுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்து உள்ளார்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன், திமுக காங்கிரஸ் கூட்டணியில் சேர வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகி அழைப்பு விடுத்திருந்தார். ஆனால், அதை உதாசினப்படுத்திய கமல், திமுக குறித்து கடுமையா விமர்சித்து வந்தார்.

இந்த நிலையில்,  தேவையில்லாமல் திமுகவை விமர்சித்திருப்பதாக, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர்  வெளியிட்ட அறிக்கையில், ”மதச்சார்பற்ற கொள்கைக்கு ஆதரவாள ராக, சனாதன எதிர்ப்பாளராக, இடதுசாரி சிந்தனையாளராக தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்ட மக்கள் நீதி மய்யம் நிறுவனர் கமல்ஹாசன் பாஜக, அதிமுக மீதான எதிர்ப்பு வாக்குகள் சிதறக் கூடாது என்ற நல்ல நோக்கத்தில் தான், திமுக-காங்கிரஸ் கூட்டணியில் அவர் இணைய வேண்டும் என்று தலைநகர் டெல்லியில் பத்திரிக்கையாளர்களிடம் கருத்து கூறினேன்.  அந்தக் கருத்தை நான் கூறும்போது, திமுகவை அவர் கடுமையாக விமர்சனம் செய்திருப்பது என் கவனத்திற்கு வரவில்லை.

கமல்ஹாசன் இத்தகைய விமர்சனம் செய்திருப்பது தேர்தல் நேரத்தில் பாஜகவுக்கு உதவுமே தவிர, அவர் ஏற்றுக்கொண்டதாகக் கூறப்பட்ட எந்த கொள்கைகளுக்கும் உதவாது. அவர் அவசியமில்லாமல்,தேவையில்லாமல் திமுகவை விமர்சித்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

தமிழகத்தைப் பொறுத்தவரை எந்த ஒரு அரசியல் கட்சியையும் கூட்டணியில் சேர்ப்பது குறித்து திமுக தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்ப்பற்ற கூட்டணி தான் முடிவு செய்யும்”

இவ்வாறு கே.எஸ்.அழகிரி கூறி உள்ளர்.