திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்குள் கத்தியுடன் புகுந்த ஒரு வாலிபர், அங்கு ரகளை செய்து வந்த நிலையில்,  திருவண்ணா மலை அருணாச்சலேஸ்வரர் கோவிலின் கோபுர நுழைவு வாயிலில் ஏகே47 துப்பாக்கியுடன் கூடிய பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

திருவண்ணாமலை கோவிலுக்கு தினசரி பல ஆயிரம் பேர் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில்,நேற்று  கர்நாடக மாநிலம் பெங்களூரு விஸ்ரோடு பகுதியை சேர்ந்த பிரத்தம் என்பவர் தனது காதலியான  ஜெனிபருடன்,  இரண்டு சக்கர வாகனம் மூலம்  திருவண்ணாமலைக்கு வந்துள்ளனர். இந்த காதல் ஜோடி, திருவண்ணாமலை அருகே உள்ள  மணலூர்பேட்டை சாலையில் உள்ள கண்ணமடை காட்டுப்பகுதிக்கு சென்று இயற்கையை ரசித்து வந்துள்ளனர். அப்போது, அவர்களை பின்தொடர்ந்து, சில மர்ம நபர்கள், அவர்கள்மீது ஸ்பிரே அடித்துவிட்டு, அந்த இளம்பெண்ணை பாலியல்   வன்கொடுமை செய்ய முற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது அந்த இளம்பெண் அலறிய நிலையில், அருகே உள்ள கண்ணமடை காட்டுப்பகுதியில் ரோந்து பணியில் இருந்த வனத்துறையினர், உடனே சம்பவ இடத்துக்கு வருகை தந்தனர். அப்போது, அங்கு சில மர்ம நபர்கள் அந்த இளம்பெண்ணிடம் சேட்டையில் ஈடுபட்டதைக ண்டனர்.  போலீசார் வருவதை கண்டதும்  மர்ம நபர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது, காலலன்  பிரத்தம் போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து விசாரித்துக் கொண்டிருக்கும்போதே, பிரத்தம் அருகிலிருந்த கொடுவாளை எடுத்து  வனத்துறையினரை  மிரட்டி அங்கிருந்து சாலைக்கு வந்துள்ளார். சாலையில், சென்றை வாகன ஓட்டியை மிரட்டி, அவரிடம் இருந்து இரு சக்கர வாகனத்தைபிடுங்கிக்கொண்டு   திருவண்ணாமலை நகர் பகுதிக்கு வந்துள்ளார்.

பின்னர் பிரத்தம், அண்ணாமலையார் கோவிலுக்குள் கொடுவாகத்தியுடன் புகுந்ததுடன், அங்குள்ள ம் ஆணையர் அலுவலகத்தில் புகுந்து அதிகாரியின் இருக்கையில் அமர்ந்து உள்ளார். அதன் பிறகு அங்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் கோவிலில் பணிபுரியும் வேலை ஆட்கள் அனைவரும் பிரத்தமை யார் என்று கேட்டுள்ளனர்.

உடனடியாக அங்கிருந்த பிரத்தம் கொடுவாளுடன் அவர்களை மிரட்டி அங்கு இருந்த கண்ணாடிகளை உடைத்ததுடன், கோவில் சுவர் மீது ஏறி மறுபக்கம் குதித்துள்ளார். அதனால், அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து, அவரை மடக்கி காவல்துறையினர் கைது செய்து   திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவருடைய காதலியிடம் திருவண்ணாமலை நகர காவல் நிலையத்தில் வைத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காதலர்கள் இரவரும்  பெங்களூரில் இருந்து இவர்கள் எதற்கு திருவண்ணாமலைக்கு வந்தார்கள். இவர்களை விரட்டி வந்தவர்கள் யார் என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், இன்றுமுதல் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலின் கோபுர நுழைவு வாசல் பகுதியில் ஏகே47 துப்பாக்கியுடன் கூடிய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.