சென்னை: தமிழ்நாட்டு கிரிக்கெட் வீரர் கமலினி மற்றும் கோ-கோ வீரர் சுப்பிரமணிக்கு தலா ரூ.25லட்சம் வழங்கினார் நிதி உதவி வழங்கி  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவுரவித்தார்.


தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில்,   தமிழ்நாட்டு கிரிக்கெட் வீரர் கமலினி மற்றும் கோ-கோ வீரர் சுப்பிரமணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலா ரூ.25 லட்சம் வழங்கினார். கமலினி, சுப்பிரமணி ஆகியோரது சாதனைகளை பாராட்டி முதல்வர் ஊக்கத்தொகை வழங்கினார்.

தலைநகர் டெல்லியில் நடைபெற்ற முதல் கோ-கோ உலகக் கோப்பை ஆடவர் பிரிவில் இந்திய அணி கோப்பையை வெல்வதற்கு துணைபுரிந்த தமிழ்நாட்டு வீரர் வி.சுப்ரமணி அவர்களுக்கு உயரிய ஊக்கத் தொகையாக 25 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.

மகளிருக்கான T20 கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டிகளில் இந்திய அணி கோப்பையை வெல்வதற்கு துணைபுரிந்த தமிழ்நாட்டு வீராங்கனை செல்வி கு.கமலினி அவர்களுக்கு உயரிய ஊக்கத் தொகையாக 25 இலட்சம் ரூபாய்க்கான காசோலை அவரது பெற்றோரிடம்  முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.