மும்பை:
லகக்கோப்பை கிரிக்கெட்: செப்.5-க்குள் வீரர்கள் பட்டியலை ஒப்படைக்க ஐசிசி அறிவுறுத்தியுள்ளது.

2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் மாதம் 5ஆம் தேதி முதல் நடைபெறுகிறது. இந்த தொடரில் 10 அணிகள் பங்கேற்கிறது.

இந்த நிலையில் தற்போது ஐசிசி ஒரு புதிய கெடுவை விதித்துள்ளது. அதன்படி 10 அணிகளும் தங்களுடைய வீரர்களை வரும் செப்டம்பர் 5ஆம் தேதிக்குள் தேர்வு செய்து அறிவிக்க வேண்டும் என்று ஐசிசி தெரிவித்துள்ளது. இதற்கு இன்னும் 50 நாட்கள் மட்டுமே உள்ளதால் அனைத்து அணிகளும் இறுதி கட்ட பணியில் ஈடுபட உள்ளது.

உலகக்கோப்பையை எப்படி அணுக வேண்டும் என்பது குறித்து எல்லாம் விவாதிக்க தற்போது அஜித் அகாக்கர் நேரடியாக மேற்கிந்திய தீவுகளுக்கு செல்ல இருக்கிறார். அங்கு வீரர்களுடன் ஆலோசனை நடத்தி விட்டு பின்னர் அணியை தேர்வு செய்யும் பணியில் பிசிசிஐ ஈடுபடும் என தெரிகிறது. தற்போது ஐசிசி செப்டம்பர் ஐந்து என கெடு விதித்துள்ளதால் இந்தியா மட்டுமல்லாமல் பாகிஸ்தான் ஆஸ்திரேலியா இங்கிலாந்து போன்ற கிரிக்கெட் வாரியங்களும் அதற்கான இறுதி கட்டப் பணிகளை தொடங்கியுள்ளன.