ஹராரே: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி,  ஜிம்பாப்வேயில் அந்நாட்டு போலீசாரின் பைக்கை  ஓட்டி அசத்தியிருக்கிறார்.
தோனிக்கு கார்கள், பைக்குகள் ஓட்டுவது என்றால் மிகவும் பிடிக்கும். அதிலும் அதிவேக பைக்குகளை வேகமாக ஓட்டுவதை மிகவும் விரும்புவார்.  அவர்  இருபதுக்கும் மேற்பட்ட நவீன அதிவேக பைக்குகள் வைத்திருக்கிறார். சொந்த ஊரான ராஞ்சியில், ஓய்வு நேரத்தில் பைக்கில் வலம் வருவது அவரது வழக்கம். இப்படி தான் பைக்கில் பறப்பதை, படம் எடுத்து தனது ட்விட்டர், பேஸ்புக் பக்கங்களில் பகிர்வதும் அவரது வழக்கம்.
Untitled
தற்போது ஜிம்பாப்வே அணிக்கு எதிரான கிரிக்கெட் போட்டிக்காக அந்நாட்டுக்குச் சென்றிருக்கிறார் தோனி.  3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றிபெற்றிருக்கிறது.
ஓய்வு நேரத்தில், ஜிம்பாப்வே காவல்துறையின்  கவாசாகி பைக்கை பார்த்த தோனிக்கு, அதை ஓட்டிப் பார்க்கும் ஆசை ஏற்பட்டுவிட்டது. உடனே,  போலீசாரிடம் அந்த பைக்கை வாங்கி ஒரு ரவுண்ட் வந்தார். அவர் பைக்கை ஓட்டிய ஸ்டைலை பார்த்து ஜிம்பாவே போலீசார் அசந்துபோய்விட்டார்களாம்.
பைக் மீது தான் அமர்ந் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் தோனி.  அந்த புகைப்படத்தை ஆயிரக்கணக்கானவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளார்கள்.