லக கோப்பை கால்பந்து போட்டியில் 36ஆண்டுகளுக்கு பிறகு வெற்றியை தனதாக்கி உள்ள அர்ஜென்டினா அணியையும், வீரர்களையும், அந்நாடு முழுவதும் பொதுமக்களும், கால்பந்து ரசிகர்களும் ஆரவாரமாக கொண்டாடி வருகின்றனர். அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் அய்ரஸ் நகரத் தெருக்களில் லட்சக்கணக்கான மக்கள்  கூச்சலும் கொண்டாட்டங்களும் கொடிகளும் பறக்கப்படப்பட்டு, தங்களது மகிழ்ச்சியை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். பொதுமக்கள் கொண்டாட வசதியாக அந்நாட்டு அரசு இன்று  (டிசம்பர் 20) நாடு முழுவதும் ஒருநாள் பொது விடுமுறை  அறிவித்து உள்ளது. கொண்டாட்டத்தின்போது, கால்பந்து ஜாம்பவான் மெஸ்சி, முன்னாள் வீரர் மறைந்த மரடோனா போன்றோரின் கொடிகளும் பறந்தன.

கத்தாரில் நடைபெற்றுமுடிந்த  கால்பந்து உலகக் கோப்பை தொடரில் அர்ஜென்டினா வெற்றி பெற்று கோப்பையை தட்டிச்சென்றுள்ளது. பரபரப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டி, ரசிகர்களின் மனதில் திக் திக் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், டைபிரேக்கரில் அர்ஜென்டினா பிரான்ஸை வீழ்த்தி வெற்றிவாகை சூடியது.  உலக கால்பந்து தொடரிலேயே நடப்பாண்டு நடைபெற்ற தொடர்தான் சிறப்பானது என்று பாராட்டப்படுகிறது.

அதுவும் பிரான்ஸ் – அர்ஜென்டினா மோதிய இறுதிப் போட்டி இதுவரை நடைபெற்ற உலகக் கோப்பைக் கால்பந்து போட்டிகளிலேயே ஆல் டைம் கிரேட் என்றும் பரவலாக உற்சாகத்தின் உச்சியில் கொண்டாடப்பட்டு வருகிறது. அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் அய்ரஸ் நகரத் தெருக்களில் கூச்சலும் கொண்டாட்டங்களும் கொடிகளும் பறந்தன. போட்டியில் வெற்றிபெற்று, கோப்பையை மெஸ்ஸி தூக்கியவுடன் அர்ஜென்டின தெருக்களில் இசையும், பாட்டுக் கச்சேரிகளும், இசைக் கருவிகளின் சப்தாவேசமும் ஒரு பெரிய தேசியத் திருவிழாவாக இந்த வெற்றியை மாற்றி விட்டது.

இந்த உலகக் கோப்பையை அர்ஜென்டினா வென்றேயாக வேண்டும் என்ற மனநிலை அந்நாட்டு மக்களிடையே வேரூஙன றி இருந்தது. இதனால், ஒவ்வொருவரும், போட்டியை மிக ஆவலோடும், வெற்றி பெற வேண்டும் என்றும் ஆக்ரோஷத்துடன் இருந்மமதக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில்தான் அர்ஜென்டினாவின் உலகக் கோப்பை வெற்றி அங்கு அனைவரையும் ஒன்று சேர்க்கும் ஒரு மகிழ்ச்சி நிரம்பிய கொண்டாட்டமாக்கியுள்ளது. இன்று 2வது நாளாகவும்  அர்ஜென்டினாவில் கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. திறந்தவெளி வாகனத்தில் உலகக்கோப்பை உடன் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டனர். வழி நெடுகிலும் மக்கள் திரண்டு வந்து வாழ்த்துகள் கூறி ஆட்டம், பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையில் அர்ஜென்டினா வெற்றி பெற்ற தருணத்தை அந்நாட்டு மக்கள் எப்படி கொண்டாடினர் என்பது தொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அடுத்த சில வாரங்கள் அர்ஜென்டினாவில் மகிழ்ச்சி ஆரவாரத்திற்கு பஞ்சமிருக்காது. அர்ஜென்டினா வெற்றியை சொந்த நாட்டில் மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளில் விதவிதமாக கொண்டாடி வருகின்றனர்.

உலகக்கோப்பை வெற்றியை கொண்டாடும் வகையில் நாடு முழுவதும் இன்று (டிசம்பர் 20) ஒருநாள் பொது விடுமுறை விடப்பட்டுள்ளது. இலவச பிரியாணி, இலவச சூப், உணவகங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் அட்டகாசமான ஆஃபர், சிறப்பு கலை நிகழ்ச்சிகள் என தாறுமாறாக சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் அர்ஜென்டினா அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.  அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழுங்கள் என குறிப்பிட்டுள்ளது.

இதற்கிடையில் இன்று நண்பகல் தலைநகர் பியூனஸ் ஐரிஸில் உள்ள தேசிய நினைவு சின்னமான Obelisco de Buenos Aires-க்கு உலகக்கோப்பையை வென்ற அர்ஜென்டினா கால்பந்து அணியினர் வருகை புரியவுள்ளனர். அங்கு தங்கள் வெற்றியை பொதுமக்களுடன் சேர்ந்து கொண்டாட இருப்பதாக அந்நாட்டு கால்பந்து கூட்டமைப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கேற்ப அரசு விடுமுறை அறிவிப்பு வந்துள்ளதால் அர்ஜென்டினா மக்கள் பலரும் ஒபிலிஸ்கோ தேசிய நினைவு சின்னத்தை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

இந்த இறுதிப் போட்டிக்கு முன்னதாக தற்போதைய அர்ஜென்டின அதிபர் ஆல்பர்ட்டோ பெர்னாண்டஸ், பிரான்ஸ் அதிபரை டேக் செய்து பதிந்த ட்வீட்டில், “எனதருமை நண்பர் மேக்ரான், உங்கள் மேல் நான் அதிக பாசமும் நேசமும் வைத்திருக்கிறேன். உங்கள் எதிர்காலம் சிறப்பாக இருக்க வாழ்த்துகிறேன். ஆனால் ஞாயிறன்று நடக்கும் இறுதிப் போட்டி நீங்கலாக. அர்ஜென்டினா ஒரு பிரமாதமான நாடு. இது லத்தீன் அமெரிக்கா!” என்று ட்வீட் செய்தது குறிப்பிடத்தக்கது.

பரபரப்பான ஆட்டம் – திக்திக் இறுதி நிமிடங்கள்…! 36ஆண்டுகளுக்கு பின் மீண்டும் உலக கோப்பையை தட்டி தூக்கியது அர்ஜென்டினா…