உலக கோப்பை கால்பந்து போட்டி இறுதி ஆட்டத்தில் பிரான்சை வீழ்த்தி கோப்பை வென்ற அர்ஜென்டினா அணி இன்று நாடு திரும்பியது.

36 ஆண்டுகள் கழித்து கோப்பை வென்றதை அடுத்து அர்ஜென்டினா முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக உற்சாகம் கரைபுரண்டு ஓடுகிறது.

கோப்பையுடன் மெஸ்ஸி தலைமையிலான கால்பந்து அணி தலைநகர் பியூனஸ் அயர்ஸ் விமான நிலையம் வந்திறங்கினர். அவர்களுக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

விமானத்தில் இருந்து கோப்பையுடன் முதலில் இறங்கிய மெஸ்ஸி-யை பார்த்ததும் ரசிகர்கள் ஆரவாரத்துடன் வரவேற்பு அளித்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.