புதுடெல்லி

ன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

வரும் 19 ஆம் தேதி முதல் நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. ஜூன் 4 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. எனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.

அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் கூட்டணி, தேர்தல் பரப்புரை, தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு உள்பட பல்வேறு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தியுள்ளன. அதன்படி இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

டெல்லியில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, மூத்த தலைவர்களான பிரகாஷ் காரத், பிருந்தா காரத் உள்ளிட்டோர் இதை வெளியிட்டனர்.

இந்த தேர்தல் அறிக்கையில் பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் தோற்கடிக்கப்பட வேண்டும். மத்தியில் மாற்று மதச்சார்பற்ற அரசாங்கம் அமைக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  மதுரை மற்றும் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிடுகிறது.