கூச் பெஹார்

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விஷப்பாம்பைக்கூட நம்பலாமே தவிர பாஜகவை நம்ப முடியாது எனக் கூறி உள்ளார்.

திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் மேற்கு வங்க மாநிலம் கூச் பெஹார் மாவட்டத்தில் நடந்த பேரணியில் கலந்துக் கொண்ட மம்தா பானர்ஜி,

”நமது அரசு புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் சிறப்பாகச் செயல்பட்டது. திரிணாமுல் கட்சிக்குப் பேரழிவு ஏற்பட்டு பாஜகவுக்குச் செல்வம் சென்றது. விஷப் பாம்பைக் கூட நம்பி செல்லமாகக் கூட வளர்க்கலாமே தவிர பா.ஜ.க.,வை நம்பவே முடியாது. 

நாட்டை.பா.ஜ.க. மிகவும் சீரழிக்கிறது. திரிணாமுல் காங்கிரஸார் சி.பி.ஐ., வருமான வரித்துறை மற்றும் ஈ.டி, போன்ற விசாரணை அமைப்புகளின் மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம். பாஜக விசாரணை அமைப்புகளை எதிர்க்கட்சிகளுக்கு எதிராகப் பயன்படுத்துகிறது. 

பா.ஜனதாவுக்காக விசாரணை அமைப்புகள் செயல்படுவதால், சமநிலையை உறுதிப்படுத்தத் தேர்தல் ஆணையத்திடம் முறையிடுவேன். பாஜக மட்டுமே ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற விதியைப் பின்பற்றுகிறது. மேற்கு வங்க மாநிலத்தில் சி.ஏ.ஏ. என்பது சட்டப்பூர்வக் குடிமக்களை வெளிநாட்டினராக மாற்றுவதற்கான ஒரு பொறியாகும்.” 

என்று பேசி உள்ளார்.