டெல்லி:

டெல்லி கலவரம் தொடர்பாக, வன்முறையைத்தூண்டும் வகையில் பேசிய பாஜக தலைவர்கள்மீது வழக்கு பதிவு செய்யக்கோரிய வழக்கில், விசாரணை ஏப்ரல் 13ந்தேதிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளி வைத்தது.

இந்த நிலையில், வெறுக்கத்தக்க வகையில் பேசியது தொடர்பாக,   2 பாஜக தலைவர்களுக்கு எதிராக உடனே வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடக்காரி  சிபிஐ (எம்) தலைவர் பிருந்தா காரத் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கும் ஏப்ரல் 23ந்தேதி விசாரிக்கப்படும் என்று  டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

டெல்லியில் நடைபெற்ற இனக்கலவரத்தில் பலியானோர் எண்ணிக்கை 50ஐ தாண்டிய நிலையில், மேலும் நூற்றுக்கணக்கானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த கலவலத்துக்கு காரணமாக, பாஜக தலைவர்கள் டெல்லி சட்டமன்ற தேர்தலின்போது பேசிய வன்முறைதான் காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி,  நீதிபதி முரளிதர் மத்திய மாநில அரசை கடுமையாக சாடிய நிலையில், 24 மணி நேரத்துக்குள் அவர்கள்மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார்.

ஆனால், மத்தியஅரசு, அவரை இரவோடு இரவாக மாற்றியதைத் தொடர்ந்து, வழக்கு விசாரணை நடத்திய வேறு நீதிபதிள் அமரவு, வழக்கு விசாரணை ஏப்ரல் 13ந்தேதிக்கு ஒத்தி வைத்தது. இது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கிடையில், டெல்லியில் வன்முறையை தூண்டும் விதமாக பேசியதாக,  பாஜக தலைவர்கள் அனுராக் தாக்கூர் மற்றும் பர்வேஷ் வர்மா ஆகியோருக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யக் கோரி கம்யூனிஸ்டு தலைவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் புகார் அளித்தார்.

ஆனால், அதை ஏற்ற நீதிமன்றம், இந்த புகார் குறித்து  ஏப்ரல் 23 ஆம் தேதி விசாரிக்கப்படும் என்று கூறி வழக்கை தள்ளி வைத்தது.

A Delhi Court defers till 23rd April the order on a complaint seeking registration of FIR against BJP leaders Anurag Thakur & Parvesh Verma. Complaint was filed by CPI(M) leader Brinda Karat against the 2 BJP leaders for their alleged hate speeches during the Delhi assembly polls